உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம், புதுச்சேரியில் வெயில் அதிகரிக்கும்

தமிழகம், புதுச்சேரியில் வெயில் அதிகரிக்கும்

சென்னை:'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 23ம் தேதி வரை, வெப்ப நிலை இயல்பை விட, 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.அதன் அறிக்கை:தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும். காலை லேசான பனி மூட்டம் காணப்படும். நாளை முதல் 23ம் தேதி வரை, ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !