மேலும் செய்திகள்
இன்று முதல் 2 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் கனமழை
26-Oct-2024
சென்னை:'தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் நவ., 1 வரை மிதமான மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.அதன் அறிக்கை:தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் நவ., 1 வரை மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு.வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களில் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.அதிகபட்சமாக நாமக்கல், மதுரை மாவட்டம், சிட்டம்பட்டியில் தலா, 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மதுரை மாவட்டம் இடையப்பட்டி, உசிலம்பட்டி தலா, 9; மதுரை சோழவந்தான், குப்பணம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதிகளில் தலா, 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.மதுரை கள்ளந்திரி, தல்லாகுளம், திருப்பூர் உப்பாறு அணை, திண்டுக்கல், நிலக்கோட்டை, மதுரை வடக்கு, பெரியபட்டி பகுதிகளில் தலா, 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Oct-2024