உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்ஜெட்டில் வராத கூடுதல் கடன்; குறைவாக வாங்கிய தமிழகம்

பட்ஜெட்டில் வராத கூடுதல் கடன்; குறைவாக வாங்கிய தமிழகம்

புதுடில்லி: தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள், கடந்த 2024--25 நிதியாண்டில், தங்களின் பட்ஜெட்டுக்கு அப்பாற்பட்ட கடன் வாங்குதலை கணிசமாக குறைத்துள்ளதாக, மத்திய நிதி அமைச்சக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மாநிலங்களின் சிறந்த நிதி மேலாண்மைக்கு ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டுக்கு அப்பாற்பட்ட கடன்கள் என்பது மத்திய, மாநில அரசுகளால் நேரடியாக இல்லாமல், மறைமுகமாக வாங்கப்படும் கடன்களை குறிக்கிறது. இத்தகைய கடன்கள், பொதுவாக பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களால் பெறப்படுகின்றன. ஆனால், இவற்றின் அசல் மற்றும் வட்டி, அரசின் பட்ஜெட்டில் இருந்து செலுத்தப்படும். இவை பட்ஜெட் கணக்குகளின் கீழ் வராததால், நிதிப் பற்றாக்குறையை குறைத்து மதிப்பிட வழிவகுக்கும்.https://x.com/dinamalarweb/status/1938835166698577982எனவே, இவ்வாறு வாங்கும் கடன்களின் மதிப்பு குறைவாக இருப்பதே, நிதி ஸ்திரத்தன்மைக்கு நன்மையானது என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

venugopal s
ஜூன் 28, 2025 16:45

தமிழகத்தின் சிறந்த நிதி மேலாண்மை என்று மத்திய பாஜக அரசே பாராட்டி உள்ளதா? இது தெரிந்தால் தமிழக சங்கிகளுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடுமே!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை