உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தமிழக பெண்; பெங்களூருவில் அட்டூழியம்

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தமிழக பெண்; பெங்களூருவில் அட்டூழியம்

பெங்களூரு: பெங்களூருவில், பஸ்சுக்காக காத்திருந்த தமிழக பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தின் கிருஷ்ணகிரி பேரிகை அருகே சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெண், கடந்த 19ம் தேதி இரவு கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்சில் வந்தார். டவுன்ஹால் பஸ் நிலையத்தில் இறங்கியவர், அங்கிருந்து, எலஹங்காவில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்கு செல்வதற்கு பி.எம்.டி.சி., பஸ்சுக்காக இரவு 11:30 மணிக்கு காத்திருந்தார். அப்போது அங்கு இரு ஆண்கள் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக தெரிகிறது. அவர்களிடம் எலஹங்கா செல்லும் பஸ் எங்கு வரும் என்று தமிழக பெண் கேட்டார்.பஸ் வரும் இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, அப்பெண்ணை இருவரும் அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பெண்ணை இழுத்துச் சென்று இருவரும், அவரை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின், அப்பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி உள்ளிட்ட நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.சம்பவம் நடந்த இடம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரித்த போலீசார், கே.ஆர்.மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் கணேஷ், 27, சரவணன், 35 ஆகியோரை நேற்று கைது செய்தனர். 'இந்த சம்பவத்தை பா.ஜ., அரசியலாக்க விரும்புகிறது. பா.ஜ., ஆட்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லையா?' என கர்நாடகா முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.இதற்கு, 'அனைத்தையும் அரசியலாக்கி நியாயப்படுத்த பார்க்கும் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என கர்நாடகா பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
ஜன 22, 2025 19:23

அரசியல் செய்யாமல்.... அவியலா செய்வார்கள் என்று உங்கள் தமிழக கூட்டாளி கட்சி தலைவர் கூறியது மறந்து விட்டதா ???


பல்லவி
ஜன 22, 2025 18:11

வடக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தாலும் ஏற்க வேண்டிய கட்டாயம்,


naranam
ஜன 22, 2025 17:15

எங்கும் நோக்கினும் திராவிட மாடல் தான். ஸார்கள் நிறைந்த இண்டி கூட்டணிக்கு மேலும் ஒரு பெருமை. மாடலோ மாடல் திராவிட மாடல்!


sankaranarayanan
ஜன 22, 2025 13:38

எலஹங்காவில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்கு செல்வதற்கு பி.எம்.டி.சி., பஸ்சுக்காக இரவு 11:30 மணிக்கு காத்திருந்தார் ஏன் அந்தப்பெண் தனது சகோதரருக்கு தொலைபேசியில் சொல்லி கூப்பிட்டு இருந்தால் என்ன? தனக்கு தானே இந்த கொடுமையை தேடிக்கொண்ட பெண் தனியாக அந்த நேரத்தில் அங்கே வரலாமா இதற்கு பாது காப்பளார்களை புகார் சொல்லி என்ன பயன் மக்களும் சற்றே விழிப்பாக இருக்க வேண்டும்


Barakat Ali
ஜன 22, 2025 12:21

காமுகர்களின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களே ........


Natchimuthu Chithiraisamy
ஜன 22, 2025 12:16

தமிழன் பொறுத்துக்கொள்கிறான் தலைமை திராவிடம்


R.ARUNKUMAR
ஜன 22, 2025 12:13

அவ்வள்வு பாலியல் ஜல்ஸாக்கள் பாஜகவில் இருக்கும்போது உங்களுக்கு திமுக -காங்கிரஸ் மேல குரல் கொடுக்க தைரியம் இருக்கா


Natarajan Ramanathan
ஜன 22, 2025 13:13

பலாத்காரம் செய்தது இரண்டும் தமிழர்கள் மற்றும் காங்கிரஸ் பொறுக்கிகள்.


Ramesh Sargam
ஜன 22, 2025 12:07

கூட்டு பலாத்தகார குற்றங்களுக்கு அப்படி ஒன்றும் நமது சட்டத்தில் பெரிய, கடினமான தண்டனை இல்லை. சில காலம் சிறையில் வைத்திருந்து, ஆதாரம் இல்லையென்று நீதிமன்றமே அவர்களுக்கு ஜாமீன் கொடுத்து விடுதலை செய்யும். இதுதான் இந்திய நாட்டில் நடக்கும் ஒரு பெரும் அவலம். வெட்கம். வேதனை. ஆத்திரம்.


sridhar
ஜன 22, 2025 10:50

காங்கிரஸ் திமுக கூட்டணி - தமிழகத்தில் திமுக , கன்னடத்தில் காங்கிரஸ்..


அப்பாவி
ஜன 22, 2025 10:41

அவிங்க மூஞ்சிககை டி.வி ல காட்டுறாங்க. திருட்டு திராவிட மூஞ்சிகள். ஒரே வாரத்தில் தூக்கில் போடணும்.


சமீபத்திய செய்தி