உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பால் உற்பத்தியில் தமிழகம் சாதனை: அமைச்சர் பெருமிதம்

பால் உற்பத்தியில் தமிழகம் சாதனை: அமைச்சர் பெருமிதம்

சென்னை:'கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் அரசின் திட்டங்களால், தமிழகம் பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கிறது' என, பால் வளத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் படி, தமிழகத்தின் பால் உற்பத்தி, 2020ம் ஆண்டு 87 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு 1 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. தனி நபருக்கு கிடைக்கும் பாலின் அளவு, 2019 - 2020ம் ஆண்டில் நாளொன்றுக்கு 316 கிராமாக இருந்தது. கடந்த 2022 - 2023ம் ஆண்டில் 369 கிராமாக உயர்ந்து உள்ளது.கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் தமிழக அரசின் திட்டங்களால் தான், இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது. கடந்த 2022 - 23ம் ஆண்டில், மாவட்ட கூட்டு றவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு, 28 லட்சம் ரூபாயும், இணைய பணியாளர்களுக்கு, 13 லட்சம் ரூபாயும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இது, 2023 - 24ம் ஆண்டில், ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு, 26 லட்சம் ரூபாய், இணைய பணியாளர்களுக்கு, 12 லட்சம் ரூபாய் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2022 - 23ம் ஆண்டில், 1.39 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு, 1,952 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் 3,433 லட்சம் ரூபாய் பங்கு ஈவுத்தொகை, 39 லட்சம் ரூபாய் ஆதரவு தள்ளுபடி வழங்கப்பட்டது.தற்போது, பால் உற்பத்தியாளர்களின் 5 லட்சம் கறவை மாடுகளுக்கு, 85 சதவீதம் மானியத்தில் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று, பால் உற்பத்தியாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற் கொள்வதால், இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது. முதல்வரின் வழி காட்டுதலால் பால் வளத் துறை, எதிர்காலங்களில் இன்னும் புதிய சாதனை சிகரங்களை எட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை