உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தமிழக மின் தேவை சரிவு

 தமிழக மின் தேவை சரிவு

சென்னை: தமிழக மின் தேவை, தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட் ஆக உள்ளது. கடந்த அக்டோபரில், வட கிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில், நவம்பர் துவக்கத்தில், வெயில் கடுமையாக இருந்தது. இதனால், வீடுகளில் 'ஏசி' சாதன பயன்பாடு அதிகரித்தது. மின் தேவை, 17,000 மெகா வாட்டாக இருந்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களில், கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல், கன மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வீடுகளில் மின் சாதனங்களின் பயன்பாடு குறைந்துள்ளது. இதையடுத்து, தமிழக மின் தேவை, 2,000 மெகா வாட் அளவுக்கு குறைந்து, 15,000 மெகா வாட்டாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ