மேலும் செய்திகள்
தி.மு.க., நன்றி மறக்க கூடாது
3 minutes ago
9 பேர் பலியான விபத்து: அரசு பஸ் டிரைவர் கைது
4 hour(s) ago | 5
சென்னை:டில்லியில் நேற்று நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், 'பழந்தமிழகத்தின் குடவோலை முறை - மக்களாட்சியின் தாய்' என்ற கருப்பொருள் அடிப்படையில், 10ம் நுாற்றாண்டு சோழர் கால குடவோலை முறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெற்றது. வாகனத்தின் முகப்பு பகுதியில் இடம் பெற்ற சிற்பங்கள், குடவோலை முறையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவதை சித்தரித்தன. அனைத்து மக்களும் தங்கள் ஓட்டு சீட்டை குடத்தில் போட வரிசையில் நிற்றல், ஒரு சிறுவன் குடத்திலிருந்து ஓலையை எடுத்ததும், தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெயரை உரக்க அறிவித்தல், அவருக்கு ஊர் பெரியவர்கள் மாலை அணிவித்து வாழ்த்துதல், கிராம மக்கள் ஆலமரத்தடியில் அமர்ந்து, கிராம மேம்பாட்டு திட்டங்களை தீட்டுதல் போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.குடவோலை குறித்து குறிப்பிடும், மருதன் இளநாகனார் எழுதிய, 'கயிறுபிணிக் குழிசி ஓலை' என்ற சங்க இலக்கிய அகநானுாற்றுப் பாடல் வரிசைகளுக்கு, இசைகோர்ப்பு செய்யப்பட்டு, மகளிர் நடனமாடியதும், பார்வையாளர்களை கவர்ந்தது.
3 minutes ago
4 hour(s) ago | 5