உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூவமாக மாறும் தாமிரபரணி ஆறு: ஐகோர்ட் மதுரை கிளை வேதனை

கூவமாக மாறும் தாமிரபரணி ஆறு: ஐகோர்ட் மதுரை கிளை வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: '' தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கவில்லை என்றால், அது கூவமாக மாறிவிடும் ,'' என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த காமராசு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், பி.புகழேந்தி கூறியதாவது: தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால், அது கூவமாக மாறும்.ஆற்றில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கக்கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க வேண்டும். கழிவுநீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும்.கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன வழி என்பது குறித்து பொதுப்பணித்துறையின் நெல்லை நீர்வள ஆதார பொறியாளர் வரும் 26 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றின் 84 மண்டலங்கள், படித்துறைகளை யார் பராமரிப்பது, பாதுகாப்பது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
செப் 24, 2024 22:25

சூப்பர். தின்னவேலியில இரண்டாவது தலைநகரம் அமைச்சிடலாம்.


Ramesh Sargam
செப் 24, 2024 20:23

சென்னையில் உள்ள கூவம், அடையாறு இவைகள் எல்லாம் கூட ஒரு காலத்தில் தூய்மையான தண்ணீர் பாயும் ஆறுகளாக இருந்தன. வளர்ச்சி என்கிற பெயரில் அந்த ஆறுகளின் அருகில் வீடுகளை கட்ட அனுமதித்து, தொழில்நிறுவனங்கள் வர அனுமதித்து, அவர்கள் வெளியேற்றும் கழிவுநீரை அந்த ஆறுகளில் கலக்க அனுமதித்து அந்த இரண்டு ஆற்றையும் மாசுபடுத்தியது ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதிமுகதான். ஆறுகளை நாம் உருவாக்கத்தான் முடியாது. இறைவன் கொடுத்த அந்த ஆறுகளை நாம் பத்திரமாக பாதுகாக்கவேண்டாமா...? ஐகோர்ட் மதுரை கிளை வேதனை அடைந்து என்ன பயன்?


RAJ
செப் 24, 2024 20:22

தீர்ப்பு தரவேண்டிய நீதிமன்றம் வேதனைப்பட்டு, புலம்பி என்ன பிரயோஜனம்???


Barakat Ali
செப் 24, 2024 19:48

திராவிட மாடலைத் தட்டிக்கேட்க உரிமை இருக்கு .......... ஆனா கரைவேட்டிகளை நினைத்தாலே அச்சம் நெஞ்சு முட்டுது .........


Ms Mahadevan Mahadevan
செப் 24, 2024 19:45

சூப்பர் இதைத்தான் எதிர் பார்த்தோம் . தாமிரபரணி கூவம் ஆக்காமல் நீதி மன்றம் கண்காணிக்க வேண்டும். அதிகாரிகளை நம்பினால் அவ்வளவு தான். ஒன்னும் நடக்காது. 10 ஆண்டுகளில் தாமிரபரணி. காணாமல் போய்விடும். உஷார்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை