உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊதிய உயர்வை குறைக்க முயற்சி டாஸ்மாக் பணியாளர் புகார்

ஊதிய உயர்வை குறைக்க முயற்சி டாஸ்மாக் பணியாளர் புகார்

சென்னை:'சட்டசபையில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை, விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, 'டாஸ்மாக்' பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, பொதுச்செயலர் தனசேகரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:டாஸ்மாக் கடைகளில், 24,000 பேர் பணிபுரிகின்றனர்; 22 ஆண்டுகளாக பணிபுரிவோர் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதிய கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். கடந்த பிப்ரவரியில் சங்கப் பிரதிநிதிகளிடம் பேசிய மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர், 'போராட்டங்கள் தேவையில்லை, பேசி தீர்வு காணலாம்' என்றார்.சட்டசபையில் ஏப்ரல் 22ல், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர், 'டாஸ்மாக் பணியாளர்களுக்கு, ஏப்ரல் முதல், 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும்' என்று அறிவித்தார்.இதற்கு, அரசாணை வெளியிட உள்ள நிலையில், ஊதிய உயர்வை குறைக்கும் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இது, அரசு மீதான நம்பிக்கையை தகர்க்கும் செயல். டாஸ்மாக் பணியாளர்களின் ஊதிய உயர்வை தடுக்கும், அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலை, முதல்வர் ஸ்டாலின் தடுத்து, சட்டசபையில் அறிவித்த ஊதிய உயர்வை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் கோரிக்கைகள் மீது பேச்சு நடத்தி தீர்வு காணவும், முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை