உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் மதுப்பிரியர்கள் ஏமாற்றம்

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் மதுப்பிரியர்கள் ஏமாற்றம்

கோவை: டாஸ்மாக் மதுபான கடையில் காலி பாட்டிலுக்கு ரூ.10 திரும்பி கொடுக்கும் நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விற்பனை கவுன்டர்களை அதிகப்படுத்தாமல் அமல்படுத்துவதால் பணிச்சுமை ஏற்படுத்தும் என்றும் கூறினர். வழக்கமாக டாஸ்மாக் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும். நேற்று கடைகள் குறித்த நேரத்தில் திறக்கவில்லை. காலை 10 மணியில் இருந்தே ஊழியர்கள் பீளமேடு டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் டாஸ்மாக் வடக்கு மாவட்ட மேலாளர் விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஊழியர்கள் தரப்பில், விற்பனை தொகையை வங்கியில் செலுத்துவது போல, இதையும் வங்கியில் கட்டுகிறோம். காலி பாட்டில் வாங்கும் வேலையை எங்கள் மீது திணிக்க கூடாது. அதற்கென இயந்திரங்கள் அமைக்க வேண்டும். அதுவரை பாட்டில், பார் டெண்டர் எடுத்தவர்களை வைத்து கையாண்டு கொள்ளுங்கள். உடையும் காலி பாட்டில்களுக்கு ஊழியர்களை பொறுப்பாக சொல்கிறார்கள். எங்களால் அதை ஏற்க முடியாது என்றனர். மேலாளர் விஸ்வநாதன், அரசு கவனத்துக்கு சென்று ஒவ்வொன்றாக சரி செய்வோம் என்று கூறினார். இதை ஏற்று டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மதியம் 2 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 12 மணியில் இருந்தே டாஸ்மாக் முன்பு மதுப்பிரியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கடை திறக்காததால் ஏமாற்றமடைந்தனர். மசக்காளிபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. டாஸ்மாக் 2 மணி நேரம் மூடப்பட்டதால், 11 டு 11 மனமகிழ் மன்றங்களில் மதுப்பிரியர்கள் அதிகளவு திரண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

BALAKUMAR
நவ 02, 2026 10:30

இதை தான் ரஜினி சொன்னாரு சிஸ்டம் சரி இல்லைன்னு. அரசியல்வாதிகள் மட்டும் ஊழல் செய்யறது இல்ல, இவர்களை போன்ற அரசு ஊழியர்கள் தான் அரசியல்வாதிகளுக்கு மிக பெரிய ஊழல் செய்வதற்கு பக்க பலமே. இவர்களை தூக்கி எறிய வேண்டும் . மேடம் ஜெயலலிதா இருந்திருந்தால் இவர்கள் இந்த ஆட்டம் போட மாட்டார்கள். விஜய் அரசு அது போல செயல்பட வேண்டும். இவர்கள் மேல் கருணை காட்ட கூடாது.


BALAKUMAR
நவ 02, 2026 10:30

இதை தான் ரஜினி சொன்னாரு சிஸ்டம் சரி இல்லைன்னு. அரசியல்வாதிகள் மட்டும் ஊழல் செய்யறது இல்ல, இவர்களை போன்ற அரசு ஊழியர்கள் தான் அரசியல்வாதிகளுக்கு மிக பெரிய ஊழல் செய்வதற்கு பக்க பலமே. இவர்களை தூக்கி எறிய வேண்டும் . மேடம் ஜெயலலிதா இருந்திருந்தால் இவர்கள் இந்த ஆட்டம் போட மாட்டார்கள். விஜய் அரசு அது போல செயல்பட வேண்டும். இவர்கள் மேல் கருணை காட்ட கூடாது.


Natarajan
நவ 02, 2026 01:31

கடைகளை இழுத்து மூடுங்கள். போராட்டத்தில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களின் சம்பளத்தை நிறுத்துங்கள். தீபாவளி அன்று வீட்டில் அடுப்பு எரியவில்லையென்றால் தானாக போராட்டம் நின்றுவிடும்.


சமீபத்திய செய்தி