உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க.,வால் தி.மு.க.,விற்கு சவால் இல்லை: கனிமொழி

த.வெ.க.,வால் தி.மு.க.,விற்கு சவால் இல்லை: கனிமொழி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: ''த.வெ.க.,வால் தி.மு.க.,விற்கு சவால் ஏதும் இல்லை. தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்,'' என தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: த.வெ.க., தனித்து போட்டியிடுவது தி.மு.க.,விற்கு எந்த சவாலாகவும் இருக்காது. அ.தி.மு.க.,விற்கும், த.வெ.க.,விற்கும் இடையேதான் சவால் இருக்கும். நிறைய அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகிறார்கள். தனித்துப் போட்டியிடுவது என்பது அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட முடிவு. அவர்களுக்கு வாழ்த்துகள். ஆனால், வெற்றி தி.மு.க.,விற்குத்தான். தி.மு.க., கூட்டணிக்குத்தான்.தமிழகம் எப்பொழுதும் ஒரே அணியில் தான் இருக்கிறது. வேறு யாரை கூட்டணியில் இணைப்பது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். ஸ்டாலினை முதல்வராக ஏற்றுக்கொண்டு வரும் எந்த அரசியல் கட்சிகளும் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம்.சில பேர் விஜயின் இந்த முடிவால் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கலாம். யார் மக்களுடைய எதிரிகள் என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் யாரை எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்கள் திமுக மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் யாரை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள், யாருக்கு தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பதுதான் முக்கியமே தவிர, யார் யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வைத்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
ஜூலை 05, 2025 10:12

சபாஷ்,சங்கிகள் தேர்தல் தோல்விக்கு இப்போது இருந்தே காரணங்களை தயார் செய்ய ஆரம்பித்தது விட்டார்கள் போல் உள்ளதே!


SIVA
ஜூலை 05, 2025 08:59

பாமக திமுக கூட்டணிக்குள் வந்தால் விசிக விஜய் கட்சி கூட்டணிக்கு சென்றால் அல்லது அதிமுக அணிக்கு சென்றால் திமுக அணிக்கு பாதிப்பு , பாமக அதிமுக கூட்டணிக்கு சென்றால் அதிமுக அணி பலம் பெரும் . விஜய் அதிமுக அணிக்கு சென்றால் அதிமுக அணி பலம் பெரும் , தனியாக நின்றால் திமுகவின் கிறித்துவ மற்றும் விசிக ஓட்டுக்களை முழுமையாக பிரிப்பார் , அரசு ஊழியர்கள் அதிமுக அணியை ஆதரிக்க வாய்ப்பு அதிகம் , சிறுபான்மை , விசிக , அரசு ஊழியரகள் என்று அடிப்படை ஓட்டு வங்கியில் இந்த முறை ஓட்டைவிழுந்துஉள்ளது ......


Amar Akbar Antony
ஜூலை 05, 2025 08:59

உண்மை. தி மு க வின் எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க விஜய்க்கு கட்சி ஆரம்பிக்கவும் தேர்தலில் நிற்கவும் பின்னணியில் உதவிசெய்துகொண்டிருப்பது தி மு க வே அதனால் இலாபம் அடைவதும் நீங்களே.


Yes God
ஜூலை 05, 2025 08:16

மக்கள் திரட்சி ஜன நாயகம் என்றழைக்கப்படுகிறது அதில் மக்ளுக்கான ஆட்சியை தேர்வு செய்வதற்கு உதவும் கட்சிகளின் பெயர் அதை நடத்துபவர் யார் அவர் தகுதி மற்றும் பிறவி இயல்புகள் எவை அதன் கொள்கைகள் நோக்கா நோக்கங்கள் படி நாட்டு மக்களை முன்னேற்ற முடியுமா கட்சியினரின் சொந்த பந்தகளற்ற வழியில் கட்சி நடத்துதலுக்கான வழி முறைகள் ஏதும் இந்திய அரசியல் சட்டத்தில் தெளிவுபடுத்தியிருப்பதாக தெரியவில்லை. வேலை வெட்டி இன்றி சுற்றித்திரிபவர்களிடமுள்ள பதவி வெறியும் மக்கள் பணத்தை சுரண்டவும் பல வகையில் புதிய கட்சியை ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்சி என்றால் அது ஆளும் தகுதியை பெறும் போது அதனிடம் மக்கள் பொதுநலம் பேணல் என்ற முக்கிய போக்கு இருக்க வேண்டும். ஒரு நாட்டில் நல்ல ஆட்சி நடத்துவதற்கு இதெல்லாம் தேவை. இவைகள் ஏதும் அரசியல் சட்டத்தில் இல்லை. அதனால் நாட்டின் முன்னேற்றம் விரைவாக அமையவில்லை.


vadivelu
ஜூலை 05, 2025 06:30

நம்ம ஓட்டே இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், தலித்துகள் , குற்றங்களை எதையும் பயம் இல்லாமல் செய்யும் நபர்கள், கொஞ்சம் கட்சிக்காரர்கள் அவ்வளவுதான். இதில் பங்கு பிரிக்க தா வே க வந்து விட்டது. பாதகம் இல்லை என்பது சும்மா.


நரேந்திர பாரதி
ஜூலை 05, 2025 05:35

ஆமாம்...நாங்க காசு கொடுத்துதான் விசையண்ணா தமிழக வெத்து கலகத்தை ஆரம்பிச்சாரு அவரு தெளிவா இருக்காரு, எப்படி ஆ.தி.மு.க மற்றும் பாஜக ஓட்டுகளை பிரிக்கணும்னு... நாங்க போட்டு கொடுத்த ரூட்டுல சரியா போயிகிட்டு இருக்காரு.... தேர்தல் முடிஞ்சதும் தமிழக வெத்து கலகத்தை, தீயமுகாவுடன் இணைச்சிட்டு மறுபடியும் நடிக்க போயிடுவாரு... இதுதான் நாங்க அவருக்கு கொடுத்து இருக்கிற அசைன்மென்ட்... நல்லா புரிஞ்சிக்கிங்க மாக்களே நாங்க கொடுக்குற காசை வாங்கிகிட்டு ஒட்டு போட்டோமா, குடிச்சோமான்னு இருக்கணும்...ரொம்ப கேள்வி கேட்டு இம்சை பண்ணக்கூடாது


xyzabc
ஜூலை 05, 2025 01:49

தி மு க விற்கு நல்ல நிலைப்பாடு


M Ramachandran
ஜூலை 05, 2025 01:17

ஒட்டு பொறுக்க திருட்டு பெயரில் உலா வரும் யேமாற்று பேர்வழி. ஹிந்துக்கள் கவனமாக இருக்க வேண்டிய தருணம். ஹிந்து மத விரோதிகள் நாடக மாடுவதில் திறமைய்ய சாலிகள்


M Ramachandran
ஜூலை 04, 2025 23:48

உங்க அண்ணன் கட்சிக்கு கூடவே இருந்து சைக்கில் ஒட்டி சர்க்கஸ் செய்தவர். அதற்குள் மறந்துட்டிங்கலெம்மா


M Ramachandran
ஜூலை 04, 2025 23:44

அட போம்மா உன் பாடே டப்பா டேன்ஸ் ஆடுது. தலை குடும்பத்துடன் ஓட்டும் இல்லை உறவும் இல்லை. எந்த நேரத்திலும் தூக்கி கடாச படலாம். உடன் பிறப்பே அரசியலே வேணா முன்னு ஓடி ஒதிங்கிடிச்சி. நீ எம்மாத்திரம். இப்போதய சூழ் நிலையில் பேசாம சசி தருரை பாலோ அப் பண்ணிடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை