உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சக ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் டெட் தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்

சக ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் டெட் தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள்

சென்னை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள், சக ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த சட்டம், தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து, 'டெட்' தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, ஆசிரியராக நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றால் பணியை தொடரலாம். இல்லையெனில், கட்டாய ஓய்வில் செல்லலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், தமிழகத்தில் பணியில் உள்ள, 1.75 லட்சம் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஆசிரியர் தேர்வு வாரியத்தால், நவம்பர் 15, 16ம் தேதிகளில் நடக்க உள்ள, 'டெட்' தேர்வுக்கு, இதுவரை இல்லாத வகையில், 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக, பணியில் உள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்களும், 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஏற்கனவே, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளிகளில் பணியாற்றும் சக ஆசிரியர்கள், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். தேர்வு மாதிரி வினாக்கள், பழைய வினாக்கள் போன்றவற்றை, 'வாட்ஸாப்' குழுக்களில் பகிர்ந்து வழிகாட்டி வருகின்றனர். சில ஆசிரியர்கள், தனியார் 'கோச்சிங்' சென்டர்களில் பணம் செலுத்தி, 'ஆன்லைன்' வழியே பயிற்சி பெற்று வருகின்றனர்.

சிறப்பு தேர்வுக்கு எதிர்ப்பு

கடந்த, 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தின், மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியதாவது: நாங்கள் ஆசிரியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை. ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்வு நடத்தலாம். அரசு பயிற்சி வழங்கலாம். அதேநேரம், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும், தமிழக அரசு சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தினால், அந்த தேர்வுக்கான நோக்கமே சீரழிந்துவிடும். எங்கள் அடையாளம் அழிந்துவிடும். ஆசிரியர்கள், தப்பிப்பதற்கு தேர்வு நடத்தினால், அதை நாங்கள் வன்மையாக கண்டிப்போம். நாங்கள் விரும்பியபடி, ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு, உருப்படியாக எதுவும் செய்யவில்லை. தேர்தல் அறிக்கையை மறந்துவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Padma mani
செப் 23, 2025 01:34

நாங்களும் சிறந்த முறையில் தெளிவாக தேர்ச்சி பெற்று தான் துறைக்குள் வந்துள்ளோம்.நீங்கள் மட்டும் தான் தேர்வு எழுதிவிட்டு வந்தது போல் சொல்கிறீர்கள்.வேறு எந்த துறையிலாவது இது போல் நடக்கிறதா?வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள். அத்துனை அரசு துறைகளையும் தேர்வு எழுத போராட்டம் செய்யுங்கள். அவ்வளவு ஏன், அரசு சார்ந்த அத்துனை பேரையும் அரசியல்வாதியும் லிஸ்ட் இல் சேர்த்து கொள்ளவும்


Padma mani
செப் 23, 2025 01:20

2003 ம் வருடம் நான் மற்றும் என்னை போன்றோர் ற்றப் என்ற காலேஜ் லெவல் எக்ஸாம் எழுதி ஆசிரியர் துறைக்குள் வந்துள்ளோம். சரி நாங்கள் எல்லாம் டேட் எழுத ஏற்று கொள்கிறோம். நீங்கள் எல்லாம் TRB எழுதுங்கள்.


MANIMARAN R
செப் 18, 2025 12:56

சங்கங்கள் கூறும் கருத்தை ஏற்று கொள்ள முடியாது . வேலையில் இருக்கும் ஆசிரியர்கள் வீட்டுக்கு போகவேண்டும் அந்த சீட்டில் நீங்கள் அமரவேண்டும் என்றால் அதுதான் உங்களின் சிறிய சிந்தனை. உங்களுக்கு போதித்த ஆசிரியர்கள் கண்ணீரில் துடிக்க நீங்கள் ஆனந்தமாய் இருக்க ஆசை படுவது தவறு உங்களுக்கு கிடைப்பது கண்டிப்பாக கிடைக்கும் அடுத்தவர்கள் கண்ணீரில் ஆனந்த படவேண்டாம்


Rajarajan
செப் 18, 2025 11:07

ஆசிரியர்கள் தங்களின் மதிப்பெண் இருபது பெற்றால் போதும் என அரசை அறிவிக்க சொல்வது, நகைப்புக்குரியது. மாணவர்களுக்கே முப்பத்தி ஐந்து மதிப்பெண் இருக்கும் போது, தங்களின் தரத்தை தாங்களே குறைப்பது பொறுப்பற்ற செயல். மேலும், தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோர், மாலைநேர கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதும், புகழ்பெற்ற கல்விநிலையங்களில் சேர்ந்து தகுதியை மேம்படுத்துவதும் தொடர்கதை. எனவே, பொறுப்பாக படித்து, தகுதியை மேம்படுத்துவதே ஆசிரியருக்கு அழகு. இல்லையெனில், அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்குவதே சரி.


Moorthy
செப் 18, 2025 09:48

மாணவ,மாணவிகளின் மைண்ட் வாய்ஸ், எங்களை டார்ச்சர் பண்றிங்கள்ல ....


சகுரா
செப் 18, 2025 09:13

டெட் தேர்வு ஆசிரியர்களுக்கு எதிரானது. அதையும் தடை கோருவோம் எங்கள் திராவ மாடல் அரசு. ஆல் பாஸ்தான் எங்களுக்கு சமூக நீதி


சமீபத்திய செய்தி