வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அவ்வளவு அக்கறை மாணவர் கல்வியில் ஆய்வாளர் சம்பளம் தண்டம்
சிவகங்கை: மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களின் அரையாண்டு தேர்வு விடைத் தாள்களை எடைக்கு போட்டுவிட்டனர். அதையறிந்த ஆசிரியர்கள் சிலர், மதுரைக்கு சென்று, அதை மீட்டு வந்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. ஆறு முதல், எட்டு வகுப்புகளுக்கு, கடந்த 9ல் தேர்வு துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது.பத்தாம் வகுப்பிற்கு டிச., 10ம் தேதி துவங்கி, நேற்று வரை நடந்தது. 10ம் வகுப்பு மாணவர்களின் தமிழ், கணிதம், அறிவியல் விடைத்தாள்கள் கடந்த சனிக்கிழமை பழைய பொருட்களுடன் சேர்த்து தவறுதலாக எடைக்கு போடப்பட்டு விட்டன.விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்கள் தேடியபோது எடைக்கு போனது தெரிந்து, அதிர்ச்சி அடைந்தனர். மதுரையில், பழைய பேப்பர்கள் அனைத்தும் அரவைக்கு அனுப்ப தயாராக இருந்தன. இதையறிந்த ஆசிரியர்கள், அவற்றை சிரமப்பட்டு மீட்டு வந்தனர். தலைமையாசிரியர் ஆரோக்கியராஜா கூறியதாவது:பழைய பேப்பருடன் தற்போது நடந்த தேர்வு விடைத் தாள்களையும் எடைக்கு போட்டு விட்டனர். இது தெரிந்து, மீட்டு வந்து விட்டோம். ஒன்பதாம் வகுப்பு கணிதம், 28 பேப்பர், 10ம் வகுப்பு கணிதம், 28 என, 56 விடைத்தாள்களை திரும்ப பெற்று விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அவ்வளவு அக்கறை மாணவர் கல்வியில் ஆய்வாளர் சம்பளம் தண்டம்