உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணம் திரும்ப தந்த ஒரு வழக்கை சொல்லுங்கள்: பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி

பணம் திரும்ப தந்த ஒரு வழக்கை சொல்லுங்கள்: பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் வரலாற்றில், நிதி மோசடி வழக்கில் விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்பட்டதாக ஏதாவது ஒரு சம்பவம் உண்டா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த, 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த, 100க்கும் மேற்பட்ட முதலீட்டார்களிடம், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உட்பட ஆறு பேரை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஜாமின் கோரி மூன்றாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தேவநாதன் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி ஜெயசந்திரன் முன் நேற்று, இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தேவநாதனுக்கு ஜாமின் வழங்கினால், அவர் சாட்சிகளை கலைக்கக் கூடும்' என, பொருளாதார குற்றப்பிரிவு வழக்கறிஞர் வாதிட்டார்.இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, 'ஓராண்டுக்கு மேல் தேவநாதனை சிறையில் அடைத்து வைத்துள்ள போதிலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.பொருளாதார குற்றப்பிரிவு வரலாற்றில், வழக்கை விரைந்து விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்று கொடுத்ததாக ஒரு வழக்கையாவது கூறுங்கள்' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, பொருளாதார குற்றப்பிரிவுக்கு கண்டனம் தெரிவித்தார்.பின், தேவநாதன் தரப்பில், 'ஆறு வாரம் காலம் இடைக்கால ஜாமின் வழங்கினால், சொத்துக்களை விற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்' என்று, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, 'தேவநாதன் தனக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ரொக்கங்கள் குறித்த விபரங்களை, வரும் 25ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.இதில், ஒரு சென்ட் நிலம் அல்லது ஒரு ரூபாயை மறைத்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து, அன்றைய தினம் முடிவெடுக்கப்படும்' எனக்கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ManiMurugan Murugan
ஆக 19, 2025 23:32

அருமை நிதி நிறுவனத்திடம் இருந்து எவ்வளவு பிடுங்கலாம் என்று தான் அரசு அதுவும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி திட்டம் தீட்டியிருக்கும்


ஆரூர் ரங்
ஆக 19, 2025 14:32

40 முன். முதியவர்கள் நிலத்திற்காக முதலீடு போட்டு ஏமாந்த கலைமகள் சபா. விசாரித்த நீதிபதிகள், கலைமகள் சபாவில் முதலீடு செய்த.118 கோடி மதிப்புள்ள சுமார் 6 லட்சம் பேர் பல ஆண்டுகளாக நிலத்துக்காக காத்திருக்கின்றனர். சுமார் 3088 சொத்துகள் சபாவுக்கு உள்ளன. இதுவரை சொத்துகள் அடையாளம் காணப்படவில்லை. தமிழ்நாட்டில்( ஆக்ரமிக்கப்பட்டுள்ள) சொத்துகளின் அடையாளம் காணும் பொறுப்பை 33 மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு. ஆனா ஒண்ணுமே நகரல. ம்ம்ம்.


GMM
ஆக 19, 2025 13:59

பண தாவா பொருளாதார குற்றமாக மாறினாலும், நில தாவா வழக்காக மாறினாலும் அவை போலீஸ், வழக்கறிஞர் தனி பஞ்சாயத்துக்கு சென்றுவிடும். உடைய பட்டவருக்கு திராவிட மாடல் ஆட்சியில் ஒரு ரூபாய் மற்றும் ஒரு சதுர அடி நிலம் திரும்பி கிடைக்காது. இது தொடர்பாக நிர்வாகத்திற்கு சில அதிகாரம் உண்டு. அவை தற்போது முடக்க பட்டு வருகின்றன. பத்திர பதிவில் குறை இருந்தால், மாவட்ட பதிவாளர் விசாரித்து ரத்து செய்து வந்தார்? தற்போது வழக்கு போட்டு கால நிர்ணயம் இல்லாத நீதிமன்றம் தான் ரத்து செய்ய முடியும் என்று நிறுத்தம். ?


Padmasridharan
ஆக 19, 2025 13:50

வரவேற்கத்தக்கது. மயிலாப்பூர் என்ற பெயருக்கே அவலம் ஏற்படுத்தியுள்ளனர்


Anand
ஆக 19, 2025 13:06

வீண் செலவு, பொருளாதார குற்றப்பிரிவை கலைத்துவிடலாம்...


Ramesh Sargam
ஆக 19, 2025 12:33

பொருளாதார குற்றப்பிரிவு வரலாற்றில், வழக்கை விரைந்து விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்று கொடுத்ததாக ஒரு வழக்கையாவது கூறுங்கள் . எங்கே கூறுவார்கள். அவற்றை எல்லாம் அவர்களே ஆட்டைபோட்டு தின்றிருப்பார்கள்.


Naga Subramanian
ஆக 19, 2025 11:56

திராவிட இயக்கத்தை சேர்ந்த புண்ணியர்களாக இருந்தால், டாஸ்மாக்கில் சம்பத்தப்பட்டவர்கள் மறைந்த மாதிரி என்றோ மறைந்து ஒளிந்துகொண்டிருப்பார்கள்.


ஆரூர் ரங்
ஆக 19, 2025 09:20

வங்கிகளும் உள்ளூர் நிதி நிறுவனங்களும் கடன் வசூல் சரியாக இருக்கும்வரைதான் நன்கு செயல்படும். ஏதோ சரியில்லை என்ற சிறு வதந்தி பரவினாலேயே நேர்மையற்ற கடனாளிகளில் பலர் டியூ கட்டுவதை நிறுத்தி விடுவார்கள். வதந்தியைக் கேட்ட டெபாஸிட் போட்டவர்களும் அதே நேரத்தில் பணத்தை எடுக்க முயன்றால் நிறுவனம் எங்கு போகும்? இந்த நிறுவனத்தில் தேவநாதன் வைத்திருப்பது ஒரே ஒரு ஷேர்தான். கோர்ட் முன்னுரிமை கொடுத்து கடன்களை வசூல் செய்ய உதவ வேண்டும். இயக்குநர்கள் நிதியைத் தவறாகப் பயன்படுத்தினர் என்ற முழுமையான ஆதாரம் கிடைத்தால் ஒழிய கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது. நீதி நிலைக்கட்டும்.


திகழ்ஓவியன்
ஆக 19, 2025 11:28

இந்த தேவநாதன் பிஜேபி தேர்தல் சீட்டு வாங்கி, அந்த நிதி பணத்தை தான் தேர்தலில் வாரி இறைத்து தோற்று டெபாசிட் இழந்தார், அதே போல ஆருத்திரா என்றாலே பிஜேபி ஆட்கள் தான், அந்த காலத்தில் காங்கிரஸ் காரன் இந்தியன் வங்கி லோன் வாங்கி ஏமாற்றினான் இந்த காலத்து பிஜேபி நிதி நிறுவனங்களை சூறை ஆடல்


Elango S
ஆக 19, 2025 12:07

ஆதாரத்துடன் தான் குற்றங்களை செய்கிறார்களா நீண்ட காலம் சிறப்பாக நடந்த நிறுவனம் இவர் காலததில் ஏன் பிரச்சனைக்குள் சிக்கியது


ஆரூர் ரங்
ஆக 19, 2025 12:56

இந்தியன் வங்கியில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலில் டிப்பர் டிரைவர் பாலு பெயரும் இருந்ததாம்.


திகழ்ஓவியன்
ஆக 19, 2025 13:14

ஒரு ரெட்டி பேர் இருக்குதாம்


Svs Yaadum oore
ஆக 19, 2025 08:44

நிதி மோசடி வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு, பாதிக்கப் பட்டவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்பட்டதாக ஒரு சம்பவம் உண்டா என, உயர் நீதிமன்றம் கேள்வி....நல்ல கேள்வி .....அதே போல சாட்சிகள் விசாரிக்கப்பது விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்கு மட்டும் வருஷக்கணக்கில் இழுத்தடிப்பு ....அதுக்கும் காரணம் விளக்கம் சொல்லுங்கள் நீதி அரசர் அய்யா ...


ramesh
ஆக 19, 2025 11:34

இதே போல வாரா கடன் என்று கூறி கார்பொரேட் முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்வதை எதிர்த்து அரசை நோக்கி நீதிமன்றம் கேள்வி கேட்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை