உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்மொழியை வளர்க்க நீங்க செய்த சாதனைகளை சொல்லுங்க; முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

தமிழ்மொழியை வளர்க்க நீங்க செய்த சாதனைகளை சொல்லுங்க; முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ்மொழியை வளர்க்க நீங்க செய்த சாதனைகளை என்னென்ன? என முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' தமிழ் மீது பிரதமர் மோடி மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார் என்றும், மாநில மொழிகளின் வளர்ச்சிக்காகத் தான் மும்மொழிப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறோம் என்றும் சொல்கின்ற பா.ஜ., வினர் தங்கள் ஆட்சியில் தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்? சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்? என்ற வேறு பாடே, அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிவிடும் ' என குற்றம் சாட்டியிருந்தார்.இதற்கு பதில் அளித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, தமிழகத்தில் எல்லைகள் கடந்து தமிழ் மொழியை வளர்க்க நீங்கள் செய்த சாதனைகள் என்னென்ன? தமிழ் மொழி தமிழகத்தின் எல்லைகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதே உங்கள் எண்ணம். தமிழின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பரப்ப பிரதமர் மோடி செய்ததில் பாதியாவது நீங்கள் செய்தீர்களா? தமிழகத்தில் முதல் ஹிந்தி ஆசிரியர் பயிற்சி கல்லூரி 1922ம் ஆண்டு ஈரோட்டில் துவங்கப்பட்டது. சமஸ்கிருதம் மொழிக்கு அதிக ரூபாய் ஒதுக்கியதாக கூறும் நீங்கள் (முதல்வர் ஸ்டாலின்), அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஹிந்தியை நாடு முழுவதும் பிரபலப்படுத்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 170க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை சமர்ப்பித்த போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இவ்வாறு முதல்வருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

வரதராஜன்
மார் 05, 2025 21:50

சார் நீங்க மேல சொல்றத கீழே செஞ்சாக வேண்டிய கடமை உங்களுக்கு .ஆகவே நீங்கதான் தமிழ்நாடு மினிஸ்டர் திரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நல்ல மனிதர் என்று சொன்னீர்கள் அல்லவா. அவர் உள்ளத உள்ளபடியே செய்தி சேனலுக்கு மும்மொழி கல்வி பற்றி சொல்லி இருக்காரு. அதை நீங்க கேளுங்க சார் அப்போ உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு பார்க்கலாம். நீங்க எடுப்பார் கைப்பள்ளையா இருக்கீங்கன்னு தெரியல சார்


Vijay
மார் 05, 2025 21:44

I am still finding a Tamil Scholar who lived between years1000 and 1800, still unable to find. This is how we have been taught in the schools.


sankaranarayanan
மார் 05, 2025 20:34

இவரு என்ன பழையவைகளை எல்லாமே கிளறுகிறாரே பசிதான் ஹிந்திக்கு முழு ஆதரவு கொடுத்தார்.எல்லா காங்கிரசு எம்.பி. க்களும் எம்.எல்.ஏ.,க்களும் ஹிந்திக்கு முழு ஆதரவுதான் கொடுத்தார்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.இதில் எந்தவித மாற்றமும் இல்லை. சந்தேகமும் இல்லை.


orange தமிழன்
மார் 05, 2025 20:19

வேண்டாம் வலிக்குது...அழுதுடுவேன்........(ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்)


சுரேஷ் சிங்
மார் 05, 2025 18:38

இந்தியை எதிர்ப்பதே பெரிய சாதனை... போவியா?


நாராயணன்,குற்றாலம்
மார் 05, 2025 20:31

ஏலே சிங் பெயரை போலியாக வைத்திருக்கும் நீ அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பாரு


M Ramachandran
மார் 05, 2025 17:34

ஆஹா எவ்வளவு சாதனை. குழந்தைகளுக்கு பெரிய வேதனை சாதனை செஉய்த்திருக்கிறார் தெரியுமா கதைய்யப்பது கட்டுரைகள் வெளியிடுவது கருணாநிதி ரீல் வுடுவது புராணம். தமைலிய்ய கொலை செய்து மாணவர்கள் படிப்பு முடிந்து வெளி வரும்போது தமிலிய்ய எழுத்து கூட்டி தன்னை போல் தடுமாறி படிக்க வைப்பது. மொத்தமாகா நம் தமிழ்நாட்டு மாணவர்களால் பிற மாநில மாணவர்கள் போராட்டிக்கு வராமல் செய்துள்ளார்


தமிழ்வேள்
மார் 05, 2025 17:33

ரிக்கார்ட் டான்ஸ் என்றொரு ஆடை அவிழ்ப்பு அசிங்கத்தை நடுத்தெருவில் நடத்துவதை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது ...பொது வெளியில் அசிங்கமாக பேசுவதை ஒரு கலையாக்கி சம்பாதித்தது மட்டுமே இங்கு திராவிடம் தமிழுக்கு செய்த தொண்டு ..அதுகளிடம் அண்ணாமலை விவரமாக கேள்விகள் கேட்டால் , புரியாமல் பேந்த பேந்த முழிப்பது மட்டுமின்றி , தாறுமாறாக தமிழில் அர்ச்சனை செய்வார்கள் ...அதை மோதலுவர் கைகொட்டி ரசிப்பார் ..


angbu ganesh
மார் 05, 2025 17:18

ஏமியும் லேது


nb
மார் 05, 2025 17:15

1. டாஸ்மாக் 2. கஞ்சா 3. காசு இருக்குறவன் மட்டும் ஹிந்தி படிக்கலாம்


Sampath Kumar
மார் 05, 2025 17:09

நீ இப்போ பேசுற மொழி என்ன மொழி ? தீ மு க தமிழுக்கு செய்ததை போல எந்த அரசும் செய்தது இல்லை நீ பேசும் மொழிக்கு உரிய உரிமையை பெற்று தந்தது தான் முக்கிய சாதனை புரிந்துகொள்


MARUTHU PANDIAR
மார் 05, 2025 21:59

இல்லாட்டி போனால் தமிழ ஒரு பொட்டலத்தில் கட்டி ஏழு கடலுக்கும் அப்பால் கொண்டு சென்று கடலு க்கடியில் ஒளித்து வைத்திருப்பார்கள் ஆரியக் கயவர்கள் இல்லியா சம்பத்து ? அது கிடக்கட்டும், தமிழை காட்டு மிராண்டி மொழி, அதை படிக்காதே, ஆங்கிலம் படி, வேலைக்காரியுடனும் ஆங்கிலத்தில் தான் பேசணும் அப்படீன்னு தமிழ் நாட்டில், ஏன் இந்தியாவிலேயே, ஏன் உலகத்துலேயே இப்படி தமிழை பழித்தஒரே ஆளு ஈ.வே.ரா . தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விட மாட்டோம் னு வீராப்பு பேசுனவங்க ஈவேராவை என்ன செஞ்சுட்டாங்க ?


சமீபத்திய செய்தி