மேலும் செய்திகள்
ஜூ ன் 28 வரை இடி, மின்னலுடன் மழை
26-Jun-2025
சென்னை:'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில், வெப்பம் இயல்பை விட இரண்டு டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது:அதன் அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை, உபாசி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில், தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கோவை சின்னக்கல்லார், திண்டுக்கல் நத்தம் பகுதிகளில், தலா 3 செ.மீ., மழை பெய்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும் 4ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் மழை பெய்யும். பலத்த தரைக்காற்று மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். அத்துடன், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை, வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Jun-2025