உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் நிதி கையாடல்: ஓய்வு ஐ.ஜி., குற்றச்சாட்டு

கோவில் நிதி கையாடல்: ஓய்வு ஐ.ஜி., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அகத்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் நிதியில், 1.34 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கூறியதாவது:சென்னை நுங்கம்பாக்கத்தில், அறநிலையத்துறையின் கீழ், அகத்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் நிதியில் இருந்து, அறநிலையத்துறை அதிகாரிகள், 1.34 லட்சம் ரூபாயை கையாடல் செய்துள்ளனர். கடந்த 2017 - 2018ம் ஆண்டு மட்டும், இந்த தொகையில், டீ, காபி, சாப்பாடு, நொறுக்குத்தீனிக்கு செலவு செய்து இருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கோவில் நிதியை முறைகேடாக செலவு செய்தால் குற்றவாளி தான்.அந்த வகையில், பணம் கையாடல் செய்த நபர்கள் மீது, 'ஆலயம் காப்போம்' என்ற அமைப்பின் சார்பில் ஆடிட்டர் ரமணன் புகார் அளித்துள்ளார். நான் அந்த அமைப்பின் ஆலோசகராக இருந்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

R Kay
ஏப் 27, 2024 13:44

கோவில்களையும், கோவில் சொத்துக்களையும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதே ஒரே தீர்வு அப்படி விடுவித்த பின்னரும் மீண்டும் அவை ஊழல்வாதிகள் கட்டுப்பாட்டில் வராமல் பார்த்துக்கொள்வது மிக மிக முக்கியம்


A1Suresh
ஏப் 27, 2024 11:34

நானே கடவுள், செய்யும் தொழிலே தெய்வம் என்றெல்லாம் இழிவான கருத்துக்களை பரப்புவது அழிவிற்கு இட்டுச் செல்லும் அரசியல்வாதிகளும் நமது ஒற்றுமையை கண்டு அஞ்சுவார்கள்


A1Suresh
ஏப் 27, 2024 11:31

ஹிந்து மக்களிடம் பள்ளிப் பருவம் முதல் ஆகமம், நிகமம், தர்மம், அஷ்டாதச வித்யாஸ்தானம் ஆகியவற்றை பற்றி மேலோட்டமாக, முன்னுரையாக பாடத்திட்டத்தில் கற்றுத்தரவேண்டும் அப்பொழுது தான் சனாதன தர்மம் என்றால் என்னவென்று புரியும் குறைந்தபட்சம் தனியார் பள்ளிகளிலாவது கற்றுத் தரலாம்


A1Suresh
ஏப் 27, 2024 11:28

? மக்கள் திருந்துவார்களா ?


Sampath Kumar
ஏப் 27, 2024 10:13

கடந்த ஆட்சில் நடந்த சம்பவத்தை இப்போ சொல்லி என்ன செய்ய போறாரு என்னசெய்யப்போறாரு ?/ ஒரு சுக்கும் இல்லை இந்த அமைப்பினர் வேடுமென்றால் இந்த அரசியின்மீது பாலி சும்மாத்தா வேடுமின்ற நோக்கில் சொல்லுகிறார்கள் உண்மையில் கார இருத்தல் நீ அப்போ சொல்ல வேண்டியது தானே சும்மா இந்த ட்ராமா என்னத்துக்கு வெயில் ஏறிப்போச்சு


Velan Iyengaar
ஏப் 27, 2024 09:37

இத்தனை வருடங்களாக தூங்கிக்கொண்டிருந்தாரா ?? கையாடல் நடந்தபோது ஆட்சியில் இருந்தது உலகமாக பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சி முட்டு கொடுத்து ஊழலில் பங்கு பெற்ற அதிமுக என்பது அனைவரும் அறிந்ததே தின்பண்டங்களிலும் பங்கு வாங்கி நொறுக்கி இருப்பார்களோ ??


Suppan
ஏப் 27, 2024 13:19

இரண்டு கழகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல பங்காளிக் கொள்ளையர்கள் வேலா தேர்தல் பத்திரங்களில் உங்க திமுகவும் கணிசமான அதுவும் லாட்டரி மார்டினிடமிருந்து வாங்கியது மறந்துவிட்டதா ?


Velan Iyengaar
ஏப் 27, 2024 09:34

வடவள்ளி கரிவரதராஜப்பெருமாள் கோவில் நகை திருட்டில் ஈடுபட்ட கோவில் பட்டர் மீது நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்பாரா ?? இது போல கோவில் நகைகளை அபேஸ் செய்யும் எதிர்த்து போராட்டம் நடத்துவாரா ???


காமராஜர், விருதுநகர்
ஏப் 27, 2024 09:30

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி மேட்டுப்பாளையம் வனபத்திர காளியம்மன் கோயில் போன்று, பொதுவாக , நாம் பணக்கார அறநிலைய துறை கோவில்களின் உண்டியலில் காணிக்கை இடுவதை தவிர்த்து , தீபாராதனை தட்டில் காணிக்கை செலுத்துவோம், அதனால் குறைந்த ஊதியம் பெறும் அர்ச்சகர்கள் அதைப் பெற முடியும். ஆனால், சனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கும் விதமாக காணிக்கை வாங்கியதற்காக அர்ச்சகர்களை கைது செய்ததன் மூலம் தற்போதைய ஆட்சியாளர்கள் எவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை இந்த செய்தி காட்டுகிறது....


Mohan
ஏப் 27, 2024 09:19

ஏற்கனவே தமிழக மக்களிடையே குறிப்பாக, இளவயதினரிடம் தமிழ் வாசிப்பு மிக குறைவாக உள்ளது இதில் நீங்க வேற ஒவ்வோரு செய்தியையும் வீடியோவில் அளித்து கேட்க சொல்வது விடாமல் மறைமுகமாக கட்டாயப்படுத்துவதைப் பார்த்தால் மிக வருத்தம்


Barakat Ali
ஏப் 27, 2024 09:18

மொத்த தமிழகத்தையே சுவாகா செய்ய முடிந்த திராவிட மாடலுக்கு நொறுக்குத்தீனி ஒரு பொருட்டே அல்ல


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை