உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுநகரை உலுக்கிய கோவில் காவலாளிகள் கொலை வழக்கு: ஒருவர் சுட்டுப்பிடிப்பு

விருதுநகரை உலுக்கிய கோவில் காவலாளிகள் கொலை வழக்கு: ஒருவர் சுட்டுப்பிடிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே நள்ளிரவில், கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியை தடுத்த இரு காவலாளிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நாகராஜ் என்பவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது சுட்டுப்பிடிக்கப்பட்டார்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தில், சேத்துார் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு பணியில் காவலாளிகளாக அப்பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து, 50, சங்கரபாண்டியன், 65, ஆகியோர் பணிபுரிந்தனர். பகல் நேர காவலாளி மாடசாமி, 65, நேற்று காலை, 6:45 மணிக்கு கோவிலுக்கு சென்ற போது, காவலாளிகள் இருவரும் கழுத்து, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். கோவிலுக்குள் இருந்த சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு, கேமரா பதிவு டி.வி.ஆர்., கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் கோவிலில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் இன்று (நவ.,12) இரட்டை கொலையில் வடக்கு தேவதானத்தை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ்(25) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். திருடப்பட்ட பொருட்களை எடுப்பதற்காக குற்றவாளியை சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, எஸ்.ஐ கோட்டியப்பசாமியை வெட்டி விட்டு குற்றவாளி தப்ப முயன்றார். உடன் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் குற்றவாளியை காலில் சுட்டுப்பிடித்தார். காயமடைந்த குற்றவாளியை மீட்ட போலீசார் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

visu
நவ 12, 2025 10:58

இந்த மாதிரி குற்றவாளிகளை அழைத்து செல்லும்போது விலங்கு போட மாட்டார்களா? இப்படி சுட்டு பிடிப்பது என்கவுண்டேர் செய்வது தொடர்கதை ஆகிவிட்டது உண்மை வெளிவருவதில்லை அதுவும் இத்தனை காவலர் சுற்றி இருக்கும்பொது சுடுவார்கள் என்று தெரியாத நீதிமன்றம் ஏன் கைதிகள் மட்டும் வழுக்கு விழுந்து எலும்பு முறிவு ஏற்படுகிறது கேள்வி கேட்டு அதன் பின் மறந்து விட்டார்கள்


Svs Yaadum oore
நவ 12, 2025 10:55

விருதுநகரில் கோவிலுக்குள் புகுந்து கொலை செய்யும் அளவுக்கு படு கேவலமான ஆட்சி நடக்குது .....ஊரெங்கும் கஞ்சா போதை கள்ள சாராயம் மெத்து டாஸ்மாக் என்று நாட்டை குட்டி சுவராக மாற்றிய விடியல் திராவிட மாடல் ....இதை விட படு கேவலமான மாடல் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது ...


Ramesh Sargam
நவ 12, 2025 10:44

சுட்டு பிடித்தார்களாம். தமிழக போலீசுக்கு இன்னும் பயிற்சி பத்தாது. உத்தரப்பிரதேசத்துக்கு சென்று ஓரிரு வருடம் பயிற்சி பெறவேண்டும், சுட்டுத்தள்ளுவதற்கு.


ராமகிருஷ்ணன்
நவ 12, 2025 10:23

விடியலின் ஆட்சி வீரமான ஆட்சி என்று மக்கள் மத்தியில் பேச வேண்டும் என்று இந்த சுட்டு பிடிக்கும் பாணி கடை பிடிக்க படுகிறது. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.


sivabalan
நவ 12, 2025 10:19

ஒவ்வொருவராக சுட்டால் திமுகவிற்கு ஓட்டு போட ஆளே இருக்காதே...


N S
நவ 12, 2025 10:10

அப்பாவின் திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில், அப்பாவின் வழிகாட்டுதல் படி, காவலர்கள் குற்றவாளிகள் என்று கருதப்படுவோரை எப்பொழுதும் சுட்டுத்தான் பிடிக்கிறார்கள். அந்தாளு, பஸ்ல டிக்கெட் எடுக்காம இறங்கியிருப்பான். போலீஸ் துரத்துகிறது என்று கூட ஓடிஇருக்கலாம். "நான்தான்" என்று ஒப்புதல் தந்தால் ஆச்சரியமில்லை.


Shekar
நவ 12, 2025 09:57

சுட்டு பிடிச்சாங்களாம்... இன்னும் 3 மாசத்தில் இவனுடைய FIR ல் புல்ஸ்டாப் வைக்கவில்லை என கோர்ட் விடுதலை செய்யும், இவன் வெளியே வந்து இன்னும் 4 பேரை போடுவான். இதுதானே நாட்டில் நடக்கிறது


duruvasar
நவ 12, 2025 09:57

எபோதுவாது நடந்தால்தான் உலுக்கும் செய்தி. இது தினம் தினம் நடக்கும் நிகழ்வு. ஆக தவறான டெம்ப்லேட் .


Ramesh Trichy
நவ 12, 2025 09:24

என்னமோ சந்தேகமாக இருக்கிறது. பூசி மெழுகுவதாக உள்ளது.


நிக்கோல்தாம்சன்
நவ 12, 2025 09:16

பங்களாதேசிகள் உள்ளே வந்ததும் கைவரிசையை பல இடங்களில் காட்டுகிறார்கள், அந்த காவலாளிகள் இறந்து கிடந்த விதம் அது இருவரோ மூவரோ செய்தது போன்று தெரியவில்லை. சில பல பங்களாதேஷை சேர்ந்த இந்து சமய வழிபாட்டுத் தலங்களும் அங்கிருந்த மக்கள் இறந்து கிடந்து இருந்ததை போன்றே இங்கும் இருந்தது சற்றே கவலைப்படக்கூடிய விஷயம். ஸ்டைன் சார் தமிழர்களை காப்பாற்றுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை