உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பக்தர்கள் வரும் வரை தான் கோவில்: சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் நீதிபதி கருத்து

பக்தர்கள் வரும் வரை தான் கோவில்: சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் நீதிபதி கருத்து

சென்னை : '' பக்தர்கள் வரும் வரை தான் கோவில்,'' என சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி கூறினார்.சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சஸ்பெண்ட் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி கூறியதாவது: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைக்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைக்கின்றனர். அங்கே காசு போட்டால்தான் பூ கிடைக்கும். இல்லையென்றாறால் விபூதி கூட கிடைக்காது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1strofbb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆருத்ரா தரிசனம் தற்போது பல கோவில்களில் நடத்தப்படுகிறது. இக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பு போல் பக்தர்கள் கூட்டம் வருவதில்லை. இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோவில் பாழாகிவிடும். பக்தர்கள் வரும் வரை தான் கோவில் எனக்குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்கில் பதிலளிக்கும்படி ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார். விசாரணயை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

NITHYANANTHAM A semma super song
அக் 21, 2024 03:53

நீதிபதி என்னும் நீதி தேவதைகள் இல்லையென்றால் இந்நாட்டில் எப்போதே மக்களின் குரல்வலைகள் நசுக்கப்பட்டிருக்கும். கோயில் என்ற பெயரால் நடைபெறும் ஆட்டுழியங்கள் சீர்திருத்தப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சிதம்பரம் கோவில் வரவேண்டும்.


அப்பாவி
அக் 19, 2024 21:35

எல்லாமே எக்கனாமிக்ஸ்தான் . யோசிச்சுப் பாருங்க. சிதம்பரம் கோவிலில் தீட்சிதர் குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவர்களில் கோவில் பூஜை செய்யும் முறை ரோஸ்டர் வெச்சு கொடுக்கப்படுகிறது. அந்த டயத்துக்குள்ள சம்பாரிச்சு புக்ளைகுட்டிகளைக் காப்பாத்தணும். அதிலும் முறை கிடைக்காத பலர் பிழைப்பு இதுமாதிரி காசு வாங்கிக் கொண்டு விபூதி குடுப்பதிலேயே இருக்கிறது. இதே நிலைமைதான் திருவண்ணானலை, ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களிலும். ஜட்ஜுகள் கொஞ்சம் அடக்கமாக பேசினால் நல்லது. இவங்களுக்கு மாசா மாசம் சம்பளம், சலுகைகள் வந்து விடுவதால் அடுத்தவர்களைப்பற்றி ஏளனம்.


அப்பாவி
அக் 19, 2024 21:29

பாக்கி இடத்துல எல்லாம் ஃப்ரீயா குடுக்கறாங்க. போய் வாங்கிக்கோங்க.


C.SRIRAM
அக் 19, 2024 21:07

வழக்கு இருக்கும் வரை தான் நீதிமன்றம் அல்லது நீதிபதி தேவை .


Ramesh Sargam
அக் 19, 2024 18:18

ஆனால் ஒன்று, காசு போட்டால்தான் பூ கிடைக்கும். இல்லையென்றாறால் விபூதி கூட கிடைக்காது. இது பல ஹிந்து கோவில்களில் நடக்கும் ஒரு அக்கிரமம். கோவிலில் பெரிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இந்த அவலநிலையை மாற்ற வேண்டும். சட்டம் எப்படி எல்லோருக்கும் ஒன்றோ, அதுபோல, கோவில்களில் எல்லாத்தர மக்களும் ஒரேமாதிரியாக நடத்தப்படவேண்டும். VVIP, VIP தரிசனங்கள் முற்றிலும் நிறுத்தப்படவேண்டும்.


Iniyan
அக் 19, 2024 16:53

நீதி மன்றங்கள் எப்போதும் இந்துக்களுக்கும் நாட்டுக்கும் விரோதிகள். இந்த நீதி மன்றங்கள் தி மீ க வின் கிளை போல செயல் படுகின்றன. நீதி மன்றங்களில் காசு கொடுத்து நீதியை விலைக்கு வாங்க முடியும் என்பதை இந்த நீதி மான் ஒத்து கொள்வாரா ?


Veeraraghavan Jagannathan
அக் 19, 2024 15:35

நடராஜர் கோயில் மட்டும் அல்ல. எந்தக் கோயிலிலும் பக்தர்கள் வரும்வரை தான் கோயில். அப்புறம் ஒரு திரு விழா வேறொரு கோயிலில் நடப்பதால், அந்தக் கோயில் விழா பிரபலம் ஆகிவிடாது. உதாரணமாக பிரம்மோத்சவம் திருப்பதி தான் பிரபலம். பிற கோயில்களிலும் நடக்கிறது. கருட சேவை திருப்பதி மற்றும் காஞ்சீபுரம் கோயில்களில் நடக்கிறது, பிரபலமும் கூட. பிற கோயில்களிலும் நடக்கிறது. ஆனால், காஞ்சியிலும், திருப்பதியில் கூட்டம் குறையவில்லை. குறையாது. எனவே சிதம்பரம் ஆருத்திரா தரிசனமும், பிற கோயில் ஆருத்திரா தரிசனமும் ஒன்று அல்ல. ங


சமீபத்திய செய்தி