8 ரயில்களுக்கு ஊஞ்சலுாரில் தற்காலிக நிறுத்தம்
சென்னை, 'சேஷாத்ரி ஸ்வாமிகள் 97வது ஆராதனை ஆண்டு விழாவையொட்டி, எட்டு விரைவு ரயில்கள் ஊஞ்சலுாரில் தற்காலிகமாக நின்று செல்லும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அறிக்கை: ஈரோடு மாவட்டம், ஊஞ்சலுாரில், சேஷாத்ரி ஸ்வாமிகள் 97வது ஆராதனை ஆண்டு விழா நடக்க உள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் விரைவு ரயில்களுக்கு, வரும் ஜன., 6 முதல் 12ம் தேதி வரை, ஊஞ்சலுாரில் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, கடலுார் போர்ட் - கர்நாடகா மாநிலம் மைசூரு, மைசூரு - கடலுார் போர்ட், துாத்துக்குடி - மைசூரு, மைசூரு - துாத்துக்குடி, நாகர்கோவில் - கோவை, கோவை - நாகர் கோவில், கேரளா மாநிலம் பாலக்காடு டவுன் - திருச்சி, திருச்சி - பாலக்காடு ஆகிய, எட்டு விரைவு ரயில்கள், ஊஞ்சலுாரில் தலா ஒரு நிமிடம் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.