உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கும்பமேளாவில் பங்கேற்கும் தமிழக பக்தர்களுக்கு தற்காலிக சொகுசு குடியிருப்புகள்!

கும்பமேளாவில் பங்கேற்கும் தமிழக பக்தர்களுக்கு தற்காலிக சொகுசு குடியிருப்புகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகா கும்பமேளாவில், பங்கேற்க செல்லும் தமிழக பக்தர்களுக்காக, 400 தற்காலிக சொகுசு குடியிருப்புகளை ஐ.ஆர்.சி.டி.சி., அமைத்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடக்கிறது. இது உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது.இந்நிலையில், பிரயாக்ராஜில் வரும் 2025 ஜன., 13ம் தேதி முதல் பிப்., 26 வரை மகா கும்பமேளா, 45 நாட்கள் நடக்க உள்ளது. இதில், 43 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜ் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்த மாநில அரசு, மத்திய அரசின் துறைகளோடு இணைந்து மேற்கொண்டு வருகிறது.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி.யின் தென்மண்டலம் சார்பில், தமிழக பக்தர்களுக்காக தற்காலிக குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:மகா கும்பமேளாவில் செல்லும் பக்தர்களுக்காக, தனியாக சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்கம், தற்காலிக, சொகுசு குடியிருப்புகள் அமைத்து வருகிறோம். மகா கும்பமேளா நடக்கும் திரிவேணி சங்கமத்தில், இருந்து 3.5 கி.மீ., துாரத்தில் பிரயாக்ராஜில் 400 சொகுசு குடியிருப்புகளை அமைத்துள்ளோம். 300 டீலக்ஸ் குடியிருப்புகளும், 100 பிரிமீயம் பிரிவில் குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுஉள்ளன.ஆரம்ப கட்டணம் 16,200 ரூபாய். உணவுகள், பெட் வசதி, , கழிப்பிட வசதி, சி.சி.டி.வி., கேமரா பாதுகாப்பு உள்ளிட்ட இருக்கும். இது குறித்து மேலும் தகவல் பெற, 8076025236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது https://www.irctctourism.com/mahakumbhgram என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சோழநாடன்
டிச 26, 2024 15:32

கும்பமேளாவுக்குச் செல்வது இறைஉணர்வைப் பெறவா? சொகுசாக இருப்பதற்காகவா? அதிலும் தமிழ்நாட்டு பக்தர்களுக்கு சொகுசு வசதி. ஆரம்ப கட்டணம் 16ஆயிரம். நல்ல இருக்குது ஆன்மீக பிசினஸ்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 08:52

சனாதனத்தை ஒழிக்க விரும்புறவங்க போகலையா ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை