உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வட மதுரையில் பயங்கர வெடிச்சத்தம்; திடீர் பரபரப்பு

வட மதுரையில் பயங்கர வெடிச்சத்தம்; திடீர் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் இன்று (மார்ச் 24) காலை 10:04 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. பல இடங்களில் அதிர்வும் உணரப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை, வேடசந்தூர், நத்தம், சாணார்பட்டி பகுதிகளில் ஆறு ஆண்டுகளாக அவ்வப்போது அரை கி.மீ., தூரத்திற்குள் பலத்த வெடிச்சத்தம் கேட்பதாக பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர்.அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது போலவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வெடிச்சத்தத்திற்கு பின்னர் வெவ்வேறு பகுதிகளில் வசிப்போரிடம் விசாரிக்கும் போது வெடிசத்தம் நீண்ட தூரத்திற்கு கேட்கிறது என்கிறார்கள்.இந்நிலையில், இன்று (மார்ச் 24) காலை 10:04 மணிக்கு வடமதுரையில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. பல இடங்களில் அதிர்வும் உணரப்பட்டது. இந்த வெடிச்சத்தம் ஏற்பட்ட நேரத்தில் வானில் பயிற்சி விமானம் பறந்தும் கொண்டிருந்தது. இந்த மர்ம சத்தம் இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கேட்கிறது.பலத்த ஒலியுடன் வெடிச்சத்தமும் அதிர்வும் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுவதும், அதிகாரிகள் சென்று விசாரணை நடத்துவதும் வழக்கமாக தொடர்ந்து நடக்கிறது. தொடரும் இந்த வெடிச்சத்தம் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
மார் 24, 2025 13:07

அது என்ன வெடிச்சத்தம், அது எப்படி நடக்கிறது. ஏன் நடக்கிறது போன்ற விவரங்கள் இல்லையே.


अप्पावी
மார் 24, 2025 13:06

வடமதுரைன்னு எழுதாம அழிச்சாட்டியம் பண்ணுறாங்க. இந்தியிலும் சரி. ஆங்கிலத்திலும் சரி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை