உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கர மன உளைச்சல், தூக்கம் வரவில்லை; தலைவர் பதவி பறிப்பு குறித்து அன்புமணி வேதனை

பயங்கர மன உளைச்சல், தூக்கம் வரவில்லை; தலைவர் பதவி பறிப்பு குறித்து அன்புமணி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: 'பயங்கர மன உளைச்சல், தூக்கம் வரவில்லை' என தலைவர் பதவி நீக்கம் குறித்து பா.ம.க., தலைவர் அன்புமணி வேதனை தெரிவித்தார்.லோக்சபா தேர்தலுக்குப் பின், பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, பனிப்போர் நீடித்து வந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில், அன்புமணியை, பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், 'இனி நானே தலைவர்' என அறிவித்தார். அத்துடன், 'அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்' என்றார். இதன் பிறகு ராமதாஸ் நடத்தும் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1n2tiu67&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அன்புமணியுடன் மனக்கசப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், மனக்கசப்பு இல்லை. இனிப்பு தான் இருக்கிறது. இனிப்பு செய்தி சொல்கிறேன் என்று பதில் அளித்து இருந்தார். இந்நிலையில் முதல்முறையாக தலைவர் பதவி நீக்கம் குறித்து, தர்மபுரியில் நடந்த பா.ம.க., கட்சி கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: கடந்த ஒரு மாதமாக பயங்கர மன உளைச்சல். தூக்கம் வரவில்லை. எனக்குள் தினமும் பல கேள்விகள் எழுகிறது. நான் என்ன தவறு செய்தேன்? தூங்குவதற்கு முன், பின் இதுதான் மனதில் தோன்றுகிறது. என்ன தவறு செய்தேன்? ஏன் மாற்றப்பட்டேன்.எனக்குத் தெரிந்து நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. என்னுடைய நோக்கம்,லட்சியம், கனவு எல்லாம் ராமதாஸின் லட்சியத்தை நிறைவேற்றுவது தான். இவ்வளவு காலமாக, ராமதாஸ் சொன்னதை அனைத்தும் செய்து முடித்தவன். இனியும், ராமதாஸ் சொல்வதை, நிச்சயமாக ஒரு மகனாக, கட்சியின் தலைவராக செய்து முடிப்பேன். அது என்னுடைய கடமை. இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராமகிருஷ்ணன்
மே 24, 2025 21:21

ரெண்டு பேரும் டாக்டரு தானே. நல்ல மாத்திரையை போட்டுட்டு படுங்க...எங்க உசுரை எடுக்காதீங்க.


K Ramesh
மே 24, 2025 22:56

ஹா...ஹா...ஹா...


சிந்தனை
மே 24, 2025 20:16

என்னங்க தலைவரே கடைசியா பாஜக தலைவர்களை பற்றி நல்ல மதிப்பு மரியாதை நாட்டை ஏற்படுத்திட்டீங்க


vbs manian
மே 24, 2025 19:52

விரைவில் உங்களுக்குத்தான் எல்லாம் வரப்போகிறது. சமாதானமாக போய் கழகத்தை எதிர்த்து செயலாற்றுங்கள்.


sekar ng
மே 24, 2025 20:06

தன் குடும்பத்திற்கு ஜாதியை வைத்து சம்பாரித்த Dr ராமதாஸ் தன் குடும்பத்தாலே அழிக்கிறார்.


என்றும் இந்தியன்
மே 24, 2025 18:55

சரி நீ தலைவனாக இருந்து என்ன??எந்த அளவுக்கு உனது கட்சி உனது இந்த பதவியால் உயர்ந்தது??ஒரு மண்ணும் இல்லை??? அப்போ தலைவர் பதவி பறிப்பு சரிதான்.


K.Ramakrishnan
மே 24, 2025 17:28

இது தான் பதவி படுத்தும் பாடு. குடும்ப கட்சி தலைவர் பதவிக்கே இந்த நிலை என்றால், மந்திரி பதவி கிடைச்சா...?


sekar ng
மே 24, 2025 19:34

குடும்ப கட்சி ஒழியவேண்டும். மேலும் ஜாதிக்கட்சிக்கு மக்கள் எதிராக வேண்டும்


Anantharaman Srinivasan
மே 25, 2025 00:33

மந்திரி பதவி கிடைச்சா...? வாஜ்பாய் அரசில் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து விதிகளை மீறி இரண்டு மெடிக்கல் காலேஜ்க்கு permission கொடுத்து மாட்டிக்கொண்டு இன்னும் இவன் மீது வழக்கு இருக்கே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை