உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாதி அபுபக்கருக்கு 7 நாள் போலீஸ் காவல்

பயங்கரவாதி அபுபக்கருக்கு 7 நாள் போலீஸ் காவல்

சென்னை:கோவை தொடர் குண்டு வெடிப்பு, ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட வழக்குகளில், 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர், கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். அபுபக்கர் சித்திக்கிடம், கடந்த, 2011ல், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை, வெடிகுண்டு வைத்து, கொலை செய்ய முயன்ற வழக்கு தொடர்பாக, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை நீதிபதி மலர்விழி நேற்று விசாரித்தார். அப்போது, அபுபக்கர் சித்திக்கிடம், ஏழு நாள் காவல் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அபு பக்கர் சித்திக்கை, பலத்த பாதுகாப்புடன், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், விசாரணைக்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை