உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கதிர் ஆனந்த் கல்லுாரியில் சோதனை நிறைவு

கதிர் ஆனந்த் கல்லுாரியில் சோதனை நிறைவு

வேலுார்: வேலுார், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில், தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரியில், கடந்த 3ம் தேதி காலை 7:00 மணி முதல், அமலாக்கத் துறை அதிகாரிகள் 15க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.இதில், பல லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். சோதனை தொடர்ந்த நிலையில், நேற்று அதிகாலை 2:40க்கு முடிந்தது. மொத்தம், 44 மணி நேரம் சோதனை நடத்தினர். வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க், சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.முன்னதாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் வீட்டில், கடந்த 3ம் தேதி மதியம் துவங்கிய சோதனை, 4ம் தேதி அதிகாலை முடிந்தது. இதிலும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜன 06, 2025 07:32

செவி வழி செய்தியெல்லாம் சாட்சியமாகாது. உண்மையிலேயே குற்றங்கள் கண்டுபிடித்தாலும் பரபரப்பான செய்திகள் வெளியிடுவதோடு சரி. விசாரணைக்கு முன் லஞ்சம் பெற்றுக் கொண்டு குற்றங்களை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க மாட்டார்கள்.


முக்கிய வீடியோ