உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தைப்பொங்கல் திருநாள்: தமிழகம் முழுவதும் உற்சாகம்

தைப்பொங்கல் திருநாள்: தமிழகம் முழுவதும் உற்சாகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இன்று தைப்பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் தை முதல் நாள் கெண்டாடப்படும் தைப்பொங்கல் தமிழர்களின் முக்கியமான பாரம்பரிய பண்டிகையாக கருதப்படுகிறது. பொங்கல் பண்டிகை தமிழகத்தில் போகி பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்களாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாள் வரும் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை நீக்கியும், வீட்டினை சுத்தம் செய்தும் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தயார் ஆவார்கள். அன்று மாலை வீட்டின் நிலைக்கதவுக்கு மேலே கூரைப்பூ, மாவிலை, தும்பை, வேப்பிலை, நாயுருவி போன்றவற்றை கொண்டு தயார் செய்த காப்பு கட்டினை கட்டுவார்கள். இதன் மூலம் பாதுகாப்பும், தெய்வத்தின் அருளும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ஆதவனுக்கு நன்றி

நம் வாழ்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதம் முதல் நாளில் தங்கள் வீடுகளில் சர்க்கரை பொங்கல் சமைத்தும், கரும்புகளை சாத்தியும் தேங்காய், பழம், வைத்து சூரியனை வழிபடுகின்றனர். பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் வண்ணக் கோலங்களை வரைந்து பொங்கலை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.

ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையின் முக்கிய அங்கமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும். இதில் பயிற்சி பெற்ற காளைகள் ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தினமலர் டாட் காம் தெரிவித்துக் கொள்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Ramesh Sargam
ஜன 16, 2024 00:26

இந்த குதூகலம் வருடம் முழுக்க இருக்கவேண்டும். மக்கள் இனிவரும் நாட்கள் பூராவும் ஒற்றுமையுடன், மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். சூரிய பகவானே போற்றி.


vaiko
ஜன 15, 2024 21:53

மீனாவா கலந்து கொண்டார், உட்சாக படுவதற்கு. கல்யாணத்திற்கு முன்பு, ஏ சி சண்முகமும், ரிசார்ட் அதிபரும் அரவணைத்து வைத்து இருந்தார்கள். இப்போது ஷண்முகமா இல்லை முருகனா? இல்லையென்றால் இப்படி தாலி அறுத்தவள் (சனாதன முறைப்படி இது மிகவும் தவறு) மோடி பக்கத்தில் நின்று பண்டிகை கொண்டாடி, குஷ்பு, நமிதா, காயத்திரி ரகுராம் வயிற்றில் நெருப்பு அல்லி போட முடியுமா?


DVRR
ஜன 15, 2024 15:42

இன்று காலையில் மனதில் நெகிழ்ந்த சிந்தனைத்துளிகள் எத்தலம் பற்ற வித்தகனாய் இத்தலம் வந்தோம் போகி: போகியாய் நீ இருந்தாய் இதுவரை அதில் தீயன கடுன்சொல், இழிசெயல் சுட்டெரி, நல்லதை போகி அனுபவி அதே போகி பண்டிகையின் சிறப்பு பொங்கல்: பொன்கல்- எத்தகைய கல்லிலும் பொன்னைப்பார். பொன் கல்-பொன்னான செயல்களை கல்-கற்பாய். இன்று முதல் வாழ்வில் நல் மாற்றம் காண். மாட்டு பொங்கல்: மாற்று பொன் கல். மாற்று பொன் கல்லையும் நன்கறிவாய். மாற்று பொன்னையும் கல்-பயில்வாய் நல் வழி சிறக்க காணும் பொங்கல்:காணும் அனைத்து பொன்னையும் கல்லாய் இருந்தவை என்றறிவாய். காணும் பொன் கல்-காணும் பொன்னிலிருந்து கல்-கற்பாய் பலவும், அதைப்போல நீயும் திகழ்வாய். இதைத்தான் நாம் சிறிய சொற்றொடரில் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று பகர்கின்றோம், மொழிகின்றோம். இனிய நாற்திசை (4 நாள்) பொங்கல் வாழ்த்துக்கள்


ஆரூர் ரங்
ஜன 15, 2024 15:20

இப்போதெல்லாம் தை 1 அன்று தமிழாண்டு பிறப்பதில்லை. திமுக கடை விரித்தும் ????கொள்வாரில்லை. அசிங்கப்பட்டுவிட்டது.


திகழ்ஓவியன்
ஜன 15, 2024 19:19

பொங்கல் பரிசு 1000 மகளிர் உரிமை தொகை 1000 வெல்ல நிவாரணம் 6000 என்று தமிழக மக்கள் ஸ்டாலினை வாழ்த்துகிறார்களாம்


Seshan Thirumaliruncholai
ஜன 15, 2024 15:08

பொங்கல் ஒவ்வொருவரும் கொண்டாடும் விழா. இது அரசு விழா அல்ல. தலைவர்கள் வாழ்த்து கூற. அதாவது ஊடகம் செய்தித்தாள் தொலைபேசி மூலம் கூறுவது செயற்கைத்தனம். உறவினர்களை நன்பர்களை தேடி சென்று வாழ்த்து கூறவேண்டும். நிலங்களில் பாடுபடும் மக்களை அழைத்து மரியாதை செய்வதுதான் ஆத்மார்த்தமான வாழ்த்து. இயற்கையான வாழ்வுமுறை இல்லாமையால் அல்லல் படுகிறோம் என்பதனை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்.


கனோஜ் ஆங்ரே
ஜன 15, 2024 14:33

“எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்ககே முழங்கு”... அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..


Sathyasekaren Sathyanarayanana
ஜன 15, 2024 19:45

அட மும்பை அறிவாளி, இந்த பண்டிகை தமிழர்கள் மட்டும்மல்ல பாரதம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் கொண்டாடுவது வெளி மாநிலத்தில் வசிக்கும் உன்னக்கு கூட தெரியாத?


Sathyasekaren Sathyanarayanana
ஜன 15, 2024 19:48

பொங்கல் பண்டிகையின் உண்மை பெயர் மகர சங்கராந்தி, தமிழகத்தில் மட்டும் அல்ல , பாரதம் முழுதும் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை, வேறு வேறு மொழிகளில் வேறே பெயர்கள். இதை ஏதோ தமிழர்கள் மட்டுமே கொண்டாடுவது என்று மதம் மாற்ற வந்த கிருத்துவ பாதிரிகளும் அவர்கள் அடிமைகளான திருட்டு திராவிட, கம்யூனிஸ்ட், கான் காங்கிரஸ் கழிசடைகள் இந்த பண்டிகையை சமத்துவம் என்று மதம் மாற்ற உபயோகிக்க மூளை சலவை செய்கிறார்கள். தமிழகம் தாண்டி வேலை செய்யும் அனைவருக்கும் இந்த உண்மை தெரியும். பொங்கல் / மகர சங்கராந்தி பண்டிகை வெறும் தமிழர்கள் பண்டிகை அல்ல. உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்களின் பண்டிகை.


vaiko
ஜன 15, 2024 21:56

அட புண்ணாக்கு, தமிழர்கள் வேறு, இந்துக்கள் வேறு. பெரியாரை தலைவனாக ஏற்று கொண்டவர்கள் தமிழர்கள். நீ ஏற்று கொண்டால் நீயும் தமிழன்தான்.


Srprd
ஜன 15, 2024 14:03

தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.


பிலிக்சு
ஜன 15, 2024 10:53

அணைத்து தமிழர்களுக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள். ஆமா, விடியல் வாழ்த்து சொல்லிட்டாரா?


Svs Yaadum oore
ஜன 15, 2024 10:45

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி


Svs Yaadum oore
ஜன 15, 2024 11:35

ஞாயிறு போற்றி ... ஞாயிறு போற்றி ....


aaruthirumalai
ஜன 15, 2024 10:22

என் இதயங்கனிந்த தமிழர் திருநாள்வாழ்த்துகள்!


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை