உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பாலியெஸ்டர் மூலப்பொருள் தரக்கட்டுப்பாடு நீக்கம்: ஏற்றுமதியாளர்கள் நிம்மதி

 பாலியெஸ்டர் மூலப்பொருள் தரக்கட்டுப்பாடு நீக்கம்: ஏற்றுமதியாளர்கள் நிம்மதி

புதுடில்லி: பாலிெயஸ்டர் மூலப்பொருள் மற்றும் நுால்களுக்கு விதித்த தரக்கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதனால், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்து, கடந்த ஆகஸ்டில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். முக்கிய சந்தையான அமெரிக்காவுக்கு ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மத்திய ரசாயன மற்றும் பெட்ரோகெமிக்கல் அமைச்சகம், இந்திய தர நிர்ணய அமைப்பான பி.ஐ.எஸ்., வாயிலாக வெளியிட்ட உத்தரவில், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்பதோடு, உள்நாட்டு சந்தையில் ஜவுளி பொருட்களை விற்பனை செய்யும் முன், தர முத்திரை உரிமம் பெற வேண்டும் என தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக, பாலிெயஸ்டர் மூலப்பொருள் வினியோகம் கிடைக்காததோடு, கூடுதல் நடைமுறை தேவையற்ற சுமையாக இருப்பதாக, ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில் அமைப்புகள் கவலை தெரிவித்து இருந்தன. குறிப்பாக, மூலப்பொருட்கள் இறக்குமதியை சார்ந்திருக்கும் சிறு உற்பத்தியாளர்கள் பாதிப்பை எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்திய தர நிர்ணய சட்டம், பிரிவு 16 விதிகளின் கீழ், முன்னர் வெளியிட்ட உத்தரவுகளை திரும்ப பெறுவதாக மத் திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பாலிெயஸ் டர் தயாரிக்கத் தேவையான இரண்டு அடிப்படை ரசாயனங்களான எத்திலீன் கிளைக்கால், டெரெப்தாலிக் அமிலம் ஆகியவற்றுக்கான தரக்கட்டுப்பாட்டு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. மேலும், பிற பாலிெயஸ்டர் நுால்களுக்கு இருந்த தர நிர்ணய விதிமுறைகளும் நீக்கப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் மத்திய அரசு செயற்கை இழை, நுால்கள் மீதான ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைத்தது. இது, தரமான ஆடைகளை மலிவான விலையில் மக்களுக்குக் கிடைக்கும் சூழலை உருவாக்கியது. க்யூ.சி.ஓ., நீக்கப்பட்ட தற்போதைய நடவடிக்கையானது, ஜவுளித் தொழிலின் ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலியின் வேகமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். துரை பழனிசாமி, தலைவர், சைமா மத்திய அரசு பாலிெயஸ்டர் இழை, நுால் மீதான தரக் கட்டுப்பாட்டு ஆணையை நீக்க உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், இந்திய ஜவுளித் துறையில் பாலிெயஸ்டர், பாலியெஸ்டர் காட்டன், ஜவுளிப் பொருட்கள் உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி அதிகரிக்கும். அருள்மொழி, தலைவர், ஓஸ்மா சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் வகையில் இருந்த க்யூ.சி.ஓ., கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பெரிய சுமை குறைந்திருக்கிறது. இதனால் , பாலிெயஸ்டர் துணிகளின் விலை குறைந்து, சர்வதேச அளவில் நமது போட்டித் தன்மை அதிகரிக்கும். உள்ளூர் மக்களுக்கும் குறைந்த விலையில் ஜவுளி கிடைக்கும். ஜெயபால், தலைவர், ஆர்.டி.எப்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை