மின் வாகனங்கள் வருகையால் மாற்றமில்லை; பெட்ரோல், டீசல் விற்பனையில் பாதிப்பில்லை
சென்னை: தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை, 2024 - 25ல், 365.90 கோடி லிட்டராகவும், டீசல் விற்பனை, 575.60 கோடி லிட்டராகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில், 6,000க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. அவற்றில் தினமும் சராசரியாக தலா, 5,000 லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது. அறிவுறுத்தல்
சுற்றுச்சூழல் பாதிப்பதை தடுக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்கவும், மின்சார வாகனங்கள் மற்றும் சி.என்.ஜி., எனப்படும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களை பயன்படுத்துமாறு, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.எனவே பலரும் மின் வாகனங்கள், இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களை வாங்கி வருகின்றனர். அதேபோல, பெட்ரோலில் ஓடும் கார், பைக்குகளையும் வாங்குகின்றனர். வாடகை கார், வேன்களை ஓட்டுவோர், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, சி.என்.ஜி., வாகனங்களை வாங்குகின்றனர். தமிழகத்தில், 2024 - 25ல் பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒட்டு மொத்த பெட்ரோல் விற்பனை, 365.90 கோடி லிட்டராகும். இது, அதற்கு முந்தைய, 2023 - 24ல், 346.60 கோடி லிட்டராக இருந்தது. இதே கால கட்டத்தில் டீசல் விற்பனை, 575 கோடி லிட்டரில் இருந்து, 575.60 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பெட்ரோல் விற்பனை கூடுதலாக, 19 கோடி லிட்டர் அதிகரித்த நிலையில், டீசல் விற்பனை, 60 லட்சம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதிகரிக்கலாம்
இது குறித்து, பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சி.என்.ஜி., எரிவாயு நிரப்பும் மையங்கள், மின் வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணி, தற்போது தான் முழு வீச்சில் நடக்கிறது. எனவே, வரும் காலங்களில், அந்த வாகனங்களின் பயன்பாடு மிகவும் அதிகரிக்கலாம்.https://x.com/dinamalarweb/status/1940236629157060871இந்த வாகனங்கள் வந்தாலும், பெட்ரோலில் ஓடும் வாகனங்களையும் வாங்குகின்றனர். டீசலில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், டிராக்டர், கட்டுமான பணிகளுக்கு டீசல் பயன்பாடு தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.