உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று மீண்டும் கூடுகிறது சட்டசபை

இன்று மீண்டும் கூடுகிறது சட்டசபை

சென்னை: இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின், தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கடந்த மாதம், 15ம் தேதி துவங்கியது. கடந்த 23ம் தேதி முதல், துறை ரீதியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நேற்றும், நேற்று முன்தினமும் அரசு விடுமுறை காரணமாக, சட்டசபை நடக்கவில்லை. விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது. இன்று, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் முத்துசாமி, அன்பரசன், சேகர்பாபு ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை