உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒருநாள் முன்னதாக ஏப்., 29ல் சட்டசபை நிறைவு

ஒருநாள் முன்னதாக ஏப்., 29ல் சட்டசபை நிறைவு

சென்னை:''தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர், ஏப்ரல் 30ம் தேதிக்கு பதிலாக 29ல் நிறைவடையும்,'' என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:ஏப்ரல் 21ல் நடக்கவிருந்த மின்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை மானிய கோரிக்கை மீதான விவாதம் 22ம் தேதியும், அன்று நடப்பதாக இருந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் 21ம் தேதியும் நடக்கும்.ஏப்ரல் 28ல் நடப்பதாக இருந்த பொதுத்துறை, சுற்றுச்சூழல், நிதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் 29ம் தேதி நடக்கும். ஏப்ரல் 29, 30ல் நடப்பதாக இருந்த காவல், தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், 28, 29ம் தேதிகளில் நடக்கும். ஏப்ரல் 30ல் சட்டசபை கூட்டம் இருக்காது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தமிழக சட்டசபை கூட்டம், மார்ச் 15ல் துவங்கி நடந்து வருகிறது; ஏப்., 30ல் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாக ஏப்., 29ல் முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை