உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உரிமைத் தொகை எனும் உருட்டு இனி எடுபடாது; நயினார் நாகேந்திரன்

உரிமைத் தொகை எனும் உருட்டு இனி எடுபடாது; நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உரிமைத் தொகை எனும் உங்கள் உருட்டு இனி எடுபடாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலினின் உரிமைத் தொகை எனும் உருட்டு இனி எடுபடாது. கடந்த சட்டசபை தேர்தலின்போது அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்குவோம் என்று மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகளாக இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, பின்பு தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே எனக்கூறி பாதி பேரைப் புறந்தள்ளிவிட்டு, இப்போது மீதமிருக்கும் 17 லட்சம் மகளிருக்கும் உரிமைத்தொகை கொடுக்கிறோம் என்று சொல்கிறீர்களே, எதற்கு இத்தனைக் குளறுபடிகள்? இவ்வளவு பித்தலாட்டங்கள்?அதிலும் கடந்த மாதம் வரை அரசு உரிமைத்தொகைக்குத் தகுதியற்றவர்களாக இருந்த தமிழக மகளிர், தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் தடாலடியாகத் தகுதி உயர்வு பெற்றதன் பின்னணி என்ன? திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கால் பெண்களின் வாக்கு வங்கி முழுவதுமாக பாதிக்கப்படும் என்ற பயமா? அல்லது ஆட்சி முடிவதற்குள் இத்திட்டத்தின் மூலமும் கணிசமான பணத்தைக் கமிஷனாக அடித்து விட வேண்டும் என்ற உத்வேகமா?வலையை விரித்து இரையைப் பிடிப்பது போல, தேர்தல் சமயத்தில் இப்படி பணத்தாசை காட்டி தமிழகப் பெண்களை உங்கள் ஓட்டு வங்கியாக மாற்றிவிடலாம் என்று நினைப்பது நியாயமா? கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தையே பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிவிட்டு, வெல்லும் தமிழ்ப் பெண்கள் என விழா எடுக்க மனசாட்சி உறுத்தவில்லையா உங்களுக்கு? இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
டிச 13, 2025 07:32

உரிமைத்தொகை பெற்றதில் பிரதான சதவிகிதம் தீம்க்காவினர் - ஓட்டுக்கான அச்சாரம் - கடன் மூலம் தமிழக மக்களின் வேஷ்டியை உருவி மகளிர் உரிமை என்று பணம் செல்கிறது.


Indian
டிச 12, 2025 22:27

ஒரு ரூபா மத்திய அரசிடம் இருந்து வாங்கி தர வாங்கில்ல . பேச வந்துட்டாங்க


Venugopal S
டிச 12, 2025 21:52

உங்கள் உருட்டு எடுபடாத மாதிரியா?


kulanthai kannan
டிச 12, 2025 21:50

திமுகவுக்கு மூன்றாமிடம்தான்


Nathansamwi
டிச 12, 2025 21:34

எப்படி ? நீங்க பீகார் ல 10000 குடுத்த மாதிரியா ?


rama adhavan
டிச 12, 2025 22:25

தமிழ்நாட்டை பற்றி மட்டும் பேசவும். பிற மாநிலம் உனக்கு எதற்கு? இந்த ஓநாய் ஆடு கதை எல்லாம் கேட்டு புளித்து விட்டது.


Nathansamwi
டிச 13, 2025 01:22

உண்மையை சொன்னால் நீ ஏன் பதறுகிறாய் ?


சமீபத்திய செய்தி