உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோழர் கட்டிய கோவில்களின் பாரம்பரியம் பறைசாற்றும் முயற்சியில் மத்திய அரசு!

சோழர் கட்டிய கோவில்களின் பாரம்பரியம் பறைசாற்றும் முயற்சியில் மத்திய அரசு!

தஞ்சாவூர்: சோழர்களின் வரலாற்றையும், சோழர்கள் கட்டிய கோவில்களின் கலை பாரம்பரியத்தையும் உலகிற்கு பறைசாற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது என மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்து உள்ளார்.தஞ்சாவூர் அரண்மனையில் கட்டடங்களைப் பார்வையிட்ட கஜேந்திர சிங் ஷெகாவத்நிருபர்களிடம் கூறியதாவது: மிகப்பெரிய கலாசார பொக்கிஷமாக கருதப்படும் தஞ்சாவூர் அரண்மனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல தஞ்சாவூர் பெரிய கோவில் உலக அளவில் மிகப்பெரிய புராதன சின்னமாக போற்றப்படுகிறது. இது மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் திகழ்கின்றன. சோழர்களின் வரலாற்றையும், சோழர்கள் கட்டிய கோவில்களின் கலை பாரம்பரியத்தையும் உலகிற்கு பறைசாற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது.இத்தலங்களுக்கு தொல்லியல் மற்றும் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கருதி சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகளுக்கு உகந்த தலமாக இருக்கும் விதமாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்பிறகு, அவர், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்குச் சென்று வழிபட்டு, கட்டடக்கலைகளைப் பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pandit
ஜூலை 26, 2025 19:09

விட்டால் திராவிஷ மாடல் கட்டுமரம் கட்டியதாக கதை விடுவார்கள்


T.sthivinayagam
ஜூலை 26, 2025 15:22

சிவாஜியை பாராட்டி மும்மையில் ஆட்சியை பிடித்து போல சோழர்கள் பெயரை சொல்லி தமிழத்தையும் பிடிச்சிட வேண்டியது தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை