உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரும், அமைச்சர்களும் கற்பனை உலகத்தில் வாழ்கின்றனர்: இபிஎஸ் குற்றச்சாட்டு

முதல்வரும், அமைச்சர்களும் கற்பனை உலகத்தில் வாழ்கின்றனர்: இபிஎஸ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வரும், அமைச்சர்களும் ஒரு பொய்யான கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் தமிழக மக்கள் படும் துன்பங்கள், வேதனைகளை அறிவதில்லை,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விவசாயிகள் படும் துயரங்கள் தொடர்பாக நான் எடுத்துக்கூறிய பிறகும், விளம்பர மாடல் திமுக அரசின் முதல்வர், ' நான் பொய் குற்றச்சாட்டு சுமத்துவதாகவும், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை,' எனப் பேட்டி அளிக்கிறார். ஆனால், விவசாயத்துறை அமைச்சரோ 16 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெல் பயிர் பாதிப்படைந்துள்ளது என்று பேட்டி கொடுக்கிறார். உணவுத்துறை அமைச்சர் நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஏற்பட்டதற்கு மத்திய அரசு காரணம் எனக்கூறுகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m7p4mfqc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கும்பகர்ண தூக்கத்தில் இருந்த இந்த திமுகஅரசு இப்போது 150 அலுவலர்களுக்கு மேல் டெல்டா பகுதிகளை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளது.நாட்டில் என்ன நடக்கிறது ? களத்தில் உள்ள பிரச்னை என்ன? என்பதைக் கூட அறிந்து கொள்ளாத முதல்வர், இன்று தமிழக முதல்வராக இருக்கிறார். இது தான் தமிழகத்தின் துரதிர்ஷ்டம்.அதிமுக ஆட்சியில் எதற்கு எடுத்தாலும் குறை சொல்லும் ஒரு சில பத்திரிகைகளும், ஊடகங்களும் அரசியல் கட்சி தலைவர்களும், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் இந்தக் கூற்றை கேட்டுக் கொண்டு மவுனமாக இருக்கின்றனர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்படுவதற்குப் போராடுவதாக் கூறும் கம்யூனிஸ்ட்களும் நெல் கொள்முதலில் நடக்கும் குளறுபடிகளை பற்றி எதுவும் கூறாமல் மவுனம் காப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.விவசாயிகளிடம் இருந்து நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய முடியவில்லை என்பதைக் கூட உணரவில்லை இந்த திமுக விளம்பர மாடல் அரசு. டெல்டா மாவட்டத்தில் என்ன நடக்கிறது என முதல்வருக்கு தெரியவில்லை. தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால், தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது எனக்கூறுவார்கள். முதல்வரும், அமைச்சர்களும் ஒரு பொய்யான கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் பொதுவான ஊடகங்களையோ, பத்திரிகைகளைப் பார்த்தோ தமிழக மக்கள் படும் துன்பங்கள், வேதனைகளை அறிவதில்லை. நேரில் சென்று பார்ப்பதில்லை.இவர்களுக்கென்று ஒரு உலகம். அதில் இவர்களுக்கு வேண்டிய அதிகாரிகள், உளவுத்துறை ஊடகங்கள், பத்திரிகைகள். மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள் என்று தங்களுக்குத் தாங்களே அதிகாரிகள் சொல்லிக் கொண்டு கனவு உலகத்தில் வாழும் இவர்களை நம்பிய விவசாயிகளும், மக்களும் தான் வாழ்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kasimani Baskaran
அக் 24, 2025 04:14

ஊடகங்களுக்கு எலும்புத்துண்டு போட்டதால் என்ன வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம். 200-500 ரூபாய் சில்லறையாக சிதறவிட்டால் புதுப்புது உடன்பிறப்புக்கள் உற்பத்தி செய்யலாம்... அடையாளம் இல்லாத பலர் ஓடோடி வருவார்கள்...


சிட்டுக்குருவி
அக் 23, 2025 20:09

விவசாயிகள் நஷ்டம் படாமல் இருக்கத்தான் மதிய அரசு விவசாயம் சீர்திருத்தம் கொண்டுவர முயற்சித்தார்கள் .ஆனால் அரசியல் காரணங்களுக்காக விவசாயிகளை அடிமைப்படுத்திவைக்கும் நோக்கத்துடன் அதைத்தடுத்தார்கள் .விவசாய உற்பத்திப்பொருள்கள் எதுவும் வீணாகாமல் ,விவசாயிகளுக்கு நஷ்டமும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்றால் சிலமுனேற்ற ,பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை .எல்லாமே அரசுவிடம் விட்டால் ஓஊழல்தான் மிஞ்சும் .விவசாயிகளே ஒன்று சேர்ந்து உற்பத்தி செய்யும் நெல்லை தகுந்த ஈரப்பதத்துடன் சேமிக்க பிரமாண்டமான silokkal என்னும் சேமிப்பு கிடங்குகளை கூட்டுறவுமுறையில் அமைத்திடவேண்டும் .அதற்க்கு மத்திய அரசும் மாநில அரசும் சம பங்குடன் நிதி மானியமாக வழங்கிடவேண்டும் .நெல்லை ஸ்டாக் மார்க்கெட்டில் விற்பனைசெய்யும் உத்தியை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் .விவசாயத்திற்கு அரசின்உதவி மானியங்களையோடு நிற்கவேண்டும். .மற்றவையெல்லாம் விவசாயிகளே கூட்டுறவுமுறையில் அவர்களே நிர்வகிக்கவேண்டும் .


T.sthivinayagam
அக் 23, 2025 19:45

அதிமுக பத்து ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அமைச்சரே முன்னாள் முதல்வரே தமிழகத்தில் விளை நிலங்களில் அதிகரிக்கவே இல்லையே நீங்கள் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை.உண்மையை சொன்னால் பாஜ கூட்டணியின் வறட்சி நிவாரண முதல்வர் வேட்பாளாரின் தேர்தல் நேர அலப்பறை என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.


சிட்டுக்குருவி
அக் 23, 2025 19:31

மக்கள் பெரிய தவறு செயகின்றார்கள் .போதுமான கல்வியறிவு இருந்தபோதிலும் மக்களிடையே விழிப்புணர்வு குறைவு . வரும்காலங்களில் படித்த இளைஞ்சர்கள் நேர்மையான சேவைசெய்ய மனம் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும் .இதுவரை தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்காதவர்கள் , போட்டியிடாதவர்களாக பார்த்து மக்கள் வாக்களிக்கவேண்டும் .எந்த ஒரு ஆட்சி பதவியில் இருந்தவருக்கும் வாக்களிக்கவில்லையென்றால் மக்களுடைய எல்லா கஷ்டங்களும்தீர வாய்ப்புண்டு .


chinnamanibalan
அக் 23, 2025 19:16

தமிழகத்தில் மோசமான ஊழல் மிகுந்த நிர்வாகத்தை, கடந்த அரை நூற்றாண்டு காலமாக மக்கள் மாறி மாறி பார்த்து விரக்தியின் விளிம்புக்கு வந்து விட்டனர். அரசு அலுவலகங்களில் பணம் கொடுக்காமல் மக்களுக்கு எதுவும் நடைபெறவில்லை என்ற நிலை வந்து விட்டது. இதற்கு அடிப்படை காரணம் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஊழல் ஆட்சியாளர்களே!


KOVAIKARAN
அக் 23, 2025 19:00

திமுகவைத் தொடர்ந்து அதிமுகவும் ஆட்சிக்கு வந்தால் நிலைமை அப்படியேதான் இருக்கும். ஏனென்றால் இதே ஊழல்செய்யும் நேர்மையற்ற அதிகாரிகள் தான் முக்கிய பணியில் இருப்பார்கள். அவர்களை பகைத்துக்கொண்டு அதிமுக நல்ல ஆட்சி செய்யமுடியாது. எனவே, இந்த இரண்டு திராவிடக்கட்சிகளுக்கு பதிலாக, ஊழலற்ற, நேர்மையான அரசியல்வாதிகளைக்கொண்ட ஒரு அரசியல் கட்சி முழுவதுமாக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால்தான், தமிழக மக்களுக்கு விமோசனம். மீண்டும் திராவிடக்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், தமிழக மக்களின் நல்ல வாழ்கை கேள்விக்குறிதான்.


திகழ்ஓவியன்
அக் 23, 2025 18:45

அன்னே 10 தோல்வி பழனி சாமி என்னவோ நீர் இப்ப முதல்வர் போல கனவு கண்டு விளையாடி கொண்டு இருக்கிறீர் , விஜய் ADMK என்கிற கட்சியே இல்லை ONLY FIGHT WITH DMK என்று சொல்லி உங்களை அசிங்க படுத்திவிட்டார்


Anantharaman Srinivasan
அக் 23, 2025 19:06

விஜய் கூட்டணியில்லாமல் நின்னு ஜெயித்து இரண்டு திராவிட கட்சியையும் நார்நாராக கிழித்து தொங்கவிடப்போகிறாரா..??


முருகன்
அக் 23, 2025 18:29

10 வருட அதிமுக ஆட்சியில் இதனை ஏன் உங்களால் சரிசெய்ய முடியவில்லை இப்போது தேர்தல் நெருங்குவதால் வேடிக்கை காட்டுவது ஏன்


புதிய வீடியோ