மேலும் செய்திகள்
வெங்கடேசன் எம்.பி., ஹிந்து விரோதி
9 minutes ago
நாளை தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்: ஹிந்து முன்னணி அறிவிப்பு
2 hour(s) ago | 10
ஓட்டுப்பதிவு மிஷின்களில் முதல்கட்ட சோதனை
7 hour(s) ago
கொள்ளையடிப்பது, கொலை செய்வது, போதையில் சாலையில் திரிவது, பாலியல் அத்துமீறல் எல்லாம், தி.மு.க., ஆட்சியில் சர்வ சாதாரணமாகி விட்டன. பொதுமக்கள் முதல் ஆசிரியர்கள், அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என, அரசு துறையில் பணியாற்றுபவர்கள் வரை, அனைவரும் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் நாட்களை கடத்துகின்றனர். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? தி .மு.க., ஆட்சியில் வழக்குகளும், கைதுகளும், போலீஸ் 'என்கவுன்டர்'களும் மட்டும் தான் பெருகுகின்றனவே தவிர, குற்றங்கள் ஏன் குறையவில்லை? காவல் துறையின் ஈரல் மொத்தமாக அழுகி விட்டது; சட்டம் - ஒழுங்கின் இதயத் துடிப்பு முழுதுமாக நின்று போய் விட்டது. இப்படி பாழாய் போன அரசு இயந்திரத்தை பழுது பார்க்காமல், அடுத்தடுத்த விளம்பர ஷூட்டிங்கிற்கு நேரம் பார்த்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, கடைநிலை அரசு ஊழியராக பதவி வகிக்கக் கூட தகுதியில்லை. - நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,
9 minutes ago
2 hour(s) ago | 10
7 hour(s) ago