வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அறம் சொல்லி தர மறந்தோம் ..திராவிட குப்பை ஆட்சியில் கட்சியினர் நிறைய பேர் பாமாலை பொருக்கி. தலைவர்களும் தங்களுக்கு பொறுக்கிகள் தேவை படுவதால் கண்டுகொள்வதில்லை . home மினிஸ்டர் , டாப் காப வேஸ்ட். ப்ரெசிடெண்ட் ஆட்சி தேவை
சென்னை:கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், 13 வயது சிறுமி, அரசு பள்ளி ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று, பெண் பாதுகாப்பு மீதான பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, 'பழனிசாமி பீதியை கிளப்புகிறார்' என்று அமைச்சர்கள் கூறினர்; இப்போது என்ன பதில் சொல்லப் போகின்றனர்?அரசு பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளியிலேயே பாதுகாப்பு இல்லை என்பது, வேலியே பயிரை மேய்கிற செயல். இந்த கொடூரத்திற்கு தி.மு.க., அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு, தமிழகத்தை தள்ளியதற்கு, தி.மு.க., அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.கொஞ்சமேனும் மனசாட்சி இருப்பின், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து, முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அறம் சொல்லி தர மறந்தோம் ..திராவிட குப்பை ஆட்சியில் கட்சியினர் நிறைய பேர் பாமாலை பொருக்கி. தலைவர்களும் தங்களுக்கு பொறுக்கிகள் தேவை படுவதால் கண்டுகொள்வதில்லை . home மினிஸ்டர் , டாப் காப வேஸ்ட். ப்ரெசிடெண்ட் ஆட்சி தேவை