உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரிட்டன், ஜெர்மனி நாடுகளுக்கு இம்மாத இறுதியில் செல்கிறார் முதல்வர்

பிரிட்டன், ஜெர்மனி நாடுகளுக்கு இம்மாத இறுதியில் செல்கிறார் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரிட்டன், ஜெர்மனியில் செயல்படும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்க, முதல்வர் ஸ்டாலின் இம்மாத இறுதியில் அந்நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தை, 2030க்குள் ஒரு டிரில்லியன் அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதாரமாக முன்னேற்ற, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு நாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் பணியில், தொழில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பிரிட்டன், ஜெர்மனியில் செயல்படும் தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு, 10 நாள் பயணமாக, இம்மாத இறுதியில் அந்நாடுகளுக்கு செல்ல உள்ளது. இக்குழுவில், தொழில் துறை அமைச்சர் ராஜா உள்ளிட்டோரும் இடம் பெறுகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இந்த வார இறுதியில் வெளியாகிறது. ஏற்கனவே, ஐக்கிய அரபு நாடுகள், துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா நாடுகளுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக, ஸ்டாலின் சென்று வந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்பாவி
ஆக 12, 2025 16:33

நீங்களும் பிரிட்டன், ஜெர்மனியோட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் போட்டு அசத்துங்க. ஒன்றியம் மட்டும்தான் போடணுமா என்ன? பியூஷ் கையெழுத்து போட அதைப் பாக்க ஜீ போகலியா?


subramanian
ஆக 12, 2025 12:36

மக்கள் வரிப்பணம் மறுபடியும் வீணாகிறது. கேட்பார் இல்லை.


jss
ஆக 12, 2025 10:01

மருத்துவ பரிசோதனை உண்டா?


V RAMASWAMY
ஆக 12, 2025 09:48

இங்கிருந்து இழுத்தால் வராதா, அங்கு போய்த்தான் இழுக்க வேண்டுமா, மக்கள் வரிப்பணத்தில்?


vbs manian
ஆக 12, 2025 09:45

இங்கு ஏற்கனவே உள்ள அந்த கம்பெனிகளுக்கு கடல் கடந்து சென்று ஒப்பந்தம் போடுவார்கள். ஏற்கனவே போட்ட ஒப்பந்தங்கள் பலன் ஏதாவது உண்டா.


ராமகிருஷ்ணன்
ஆக 12, 2025 09:31

தேர்தல் செலவுக்கு பதுக்கிய பணத்தை ரிலீஸ் செய்ய போகிறார்பா. இதுக்கு பில்டப்பு


சிவம்
ஆக 12, 2025 08:48

வாழ்த்துக்குள் முதல்வர் அவர்களே!!


சுரேஷ் பாபு
ஆக 12, 2025 07:36

இதுக்கு முன்னாடி துபாய் ஸ்பெயின் அமெரிக்கா போய் வாங்கிட்டு வந்த முதலீடுகளை வைக்கவே இடம் இல்லை. இனி புது முதலீடுகளை எங்க வெக்கிறது. என்ன பண்றது ஒண்ணும் புரியலையே.


குமார், மதுரை
ஆக 12, 2025 07:00

இரண்டு காரணங்கள் 01. பிரதமர் ஆகஸ்ட் 26 வருகிறார். அதைத் தவிர்த்து விடலாம் 02. வெளிநாடு செல்வது அங்கு முதலீடு செய்வது சம்பந்தமாக அல்லது செய்துள்ள முதலீடு சம்பந்தமாக. தற்போது வெளிநாடுகளிலுள்ள தமிழ்ச்சங்கங்களில் திமுகவின் ஆக்கிரமிப்பே அதிகம். அதிலுள்ளவர்கள் முதலீடுகளுக்கு கான்டியூட் ஆக உள்ளனர் என்று பல வெளிநாட்டு நண்பர்கள் கூறுகின்றனர்


எவர்கிங்
ஆக 12, 2025 06:59

சுப்ரா இடத்துக்கு ஆள் தேவை


முக்கிய வீடியோ