உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் பொய் சொல்கிறார்: அண்ணாமலை ஆவேசம்

முதல்வர் பொய் சொல்கிறார்: அண்ணாமலை ஆவேசம்

சென்னை : 'தமிழகத்தில் செயல்படுத்தப்படாத திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:தமிழகம் தன் பெருமையை தொலைத்து, கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும், கடைசி இடத்தில் உள்ளது. கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழக குழந்தைகளுக்கு, சமமான வாய்ப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் வெட்கப்பட வேண்டும்.நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்து, 'சமக்ர சிக் ஷா'வின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உறுதி அளித்தது. இந்த உறுதிமொழியை, ஸ்டாலின் அரசு நிறைவேற்றவில்லை. செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என எதிர்பார்க்கிறீர்கள்.சமர சிக் ஷா திட்டத்தின் கீழ் பல மாநிலங்களுக்கு, இன்னும் 2024 - 25ம் ஆண்டுக்கான நிதி விடுக்கப்படவில்லை. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப முதல்வருக்கு வெட்கமாக இல்லையா?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SAMANIYAN
பிப் 10, 2025 13:26

முதல்வர் ஒன்றும் பொய் சொல்லவில்லை அவருக்கு எழுதி கொடுத்ததை தான் அவர் படிக்குறார் ..எழுதி கொடுத்தது பொய்யோ ,உண்மையோ அவருக்கு எப்படி தெரியும்..சற்று மனசாட்சியோடு திட்டுங்கள்..அவரே பாவம்..


Ramesh Sargam
பிப் 10, 2025 12:12

முதல்வருக்கு பொய்யை தவிர வேறொன்றும் தெரியாது அண்ணாமலை அவர்களே... அவர் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தவர், அவருக்கு பொய்யை தவிர வேறொன்றும் தெரியாது.


xyzabc
பிப் 10, 2025 11:10

What is new? CM speaks lies and nothing but lies. We all need to clean our ears


VENKATASUBRAMANIAN
பிப் 10, 2025 07:13

இந்த பொய்யை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். இல்லையெனில் அந்த பொய் உண்மை என்று ஆகிவிடும். இதுவே திமுக வாக் இருந்தால் இன்னேரம் செய்திருக்கும்.


முக்கிய வீடியோ