உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதிமுக.,வுக்கு தீப்பெட்டி, விசிக.,வுக்கு பானை, ஓ.பி.எஸ்.,க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு

மதிமுக.,வுக்கு தீப்பெட்டி, விசிக.,வுக்கு பானை, ஓ.பி.எஸ்.,க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலில் ம.தி.மு.க.,வுக்கு தீப்பெட்டி சின்னத்தையும், விசிக.,வுக்கு பானை சின்னத்தையும், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு பழாப்பழ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் வைகோ மகன் துரை போட்டியிடுகிறார். தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி, வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dh1ny65s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், ஒரே மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே, முன்பு ஒதுக்கீடு செய்த சின்னத்தை தர முடியும். பம்பரம் பொதுச்சின்னமாக அறிவிக்கவில்லை. அதை ஒருவருக்கும் ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து புதிய சின்னத்தை தேடும் பணியில் ம.தி.மு.க., ஈடுபட்டது.இந்நிலையில், லோக்சபா தேர்தலில் ம.தி.மு.க.,வுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, சின்னத்துடன் திருச்சியில் மதிமுக.,வினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசிக.,வுக்கு பானை சின்னம்

லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. பானை சின்னம் ஒதுக்கீடு செய்ததற்கான, ஆணையை தேர்தல் அலுவலரிடம் இருந்து திருமாவளவன் பெற்றுக் கொண்டார். கடந்த 2019ம் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவனுக்கு மீண்டும் அதோ சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஓ.பி.எஸ்.,க்கு பலாப்பழ சின்னம்

ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாளி, பலாப்பழம், திராட்சை ஆகிய 3 சின்னங்களில் ஏதாவது ஒன்று ஒதுக்குமாறு பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திடம் மனுத்தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
மார் 30, 2024 22:16

சிகரெட் வியாபாரிக்குதான் தீப்பெட்டி சின்னம் அவசியமே.


RAMAKRISHNAN NATESAN
மார் 30, 2024 21:16

மா டீம்கா வுக்கு தீப்பெட்டி பொருத்தம் தலீவன் எவனும் செஞ்சுக்க மாட்டான் முத்துக்குமார் தீக்குளிப்பு மறக்க முடியாத சம்பவம்


Godfather_Senior
மார் 30, 2024 19:06

The right symbol for the VaikO group to remind about the persons who lost their lives during his earlier days Self immolation remembrance is rightly pointed with Match Box symbol :=


moorthy
மார் 30, 2024 16:27

VCK SHOULD LOOSE DEPOSIT. .


HoneyBee
மார் 30, 2024 16:06

சரியா தான் கொடுத்தார்கள் சைக்கோவுக்காக தீக்குளித்து இறந்தவர்கள் நினைவாக இன்னும் எத்தனை பேரை கொல்வானோ அந்த பொட்டி கோவாலு


என்றும் இந்தியன்
மார் 30, 2024 19:05

இந்த கட்சிகளுக்கு சரியான சின்னத்தைதான் கொடுத்திருக்கின்றார்கள் பானை - ட்ப்பா அடிப்பவர் தீக்குச்சி - வெறும் உரசினால் மட்டுமே வெளிச்சம் கொடுப்பவர் வாளி - வாளி வாளியாய் பொய் சொல்பவர் மைக் - எப்போதும் உளறிக்கொண்டே இருப்பவர்


pv, முத்தூர்
மார் 30, 2024 15:59

பொருத்தமான சின்னம்- எத்தனை தொன்டர்களை துரோகம் செய்தார்கள்


kuppusamy India
மார் 30, 2024 15:56

நம்பி வந்த தொண்டர்கள் தீக்குளித்து வளர்த்த கட்சி.. . அருமையான சின்னம்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ