உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அருப்புக்கோட்டை கோவிலில் திதி செய்யவிடாமல் தடுத்த செயல் அலுவலர்

அருப்புக்கோட்டை கோவிலில் திதி செய்யவிடாமல் தடுத்த செயல் அலுவலர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோயிலில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய வந்த பக்தர்களை கோயில் செயல் அலுவலர் ராமதிலகம் தடுத்ததால் பல மணி நேரம் காத்திருந்து வேதனையுடன் தர்ப்பணம் செய்துவிட்டு சென்றனர்.அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் ஹிந்து சமய அறநிலைய துறைக்கு பாத்தியப்பட்ட பட்டாபிராமர் கோயில் உள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோயிலில் 50 ஆண்டுகளுக்குமேலாக பக்தர்கள் கோயிலுக்கு வந்து அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். முக்கியமாக மஹாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில்அதிகமானோர் தர்ப்பணம் செய்து வந்தனர். திருச்சுழி, ராமேஸ்வரம் செல்ல முடியாத வயதானவர்கள், ஏழை மக்கள் இங்கு வந்து தர்ப்பணம் செய்வர். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு மக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்தனர். கோயிலின் செயல் அலுவலர் ராமதிலகம் கோயில் அர்ச்சகரிடம் யாரும் தர்ப்பணம் செய்யக்கூடாது என கூறிவிட்டார். தர்ப்பணம் செய்ய வந்தவர்களும் செயல் அலுவலரிடம் அலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் மறுத்துவிட்டார். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாத நிலையில் வேதனையில் இருந்தனர். பல மணி நேரம் கழித்து செயல் அலுவலர் சம்மதத்துடன் கோயிலில் பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர்.இக்கோயிலில் ஓராண்டாக பணியாற்றி வரும் செயல் அலுவலர் ராமதிலகத்திடம் இதுகுறித்து கேட்டபோது, கோயிலில் தர்ப்பணம் செய்யும் வழக்கம் பல ஆண்டுகளாக இருப்பது எனக்கு தெரியாது. புதியதாக தர்ப்பணம் செய்ய வருகிறார்கள் என நினைத்து செய்யக்கூடாது என நான் கூறினேன். என்றார்.கோயிலில் தர்ப்பணம் செய்ய வந்த பக்தர்கள் கூறியதாவது: நாங்கள் 40 ஆண்டுகளாக இக்கோயிலில் தர்ப்பணம் செய்து வருகிறோம். இப்போதுள்ள செயல் அலுவலர் ராமதிலகம் கோயிலில் தர்ப்பணம் செய்யக்கூடாது என தடுக்கிறார். காலையிலிருந்து கத்திருந்து மன உளைச்சலுக்கு ஆளானோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sasikumaren
பிப் 01, 2025 14:15

அந்த அறிவு கெட்ட உதவாக்கரை ராமதிலகத்திற்க்கு ஒரு ஆப்பு வைத்திடுங்கள்


chinnamanibalan
ஜன 30, 2025 19:25

கோவிலின் நடைமுறை பழக்க வழக்கங்கள் கூட அறியாமல், அதன் செயல் அலுவலர் ஓராண்டு காலம் அங்கு பணியாற்றி உள்ளார் என்பது ஆச்சரியம் அளிக்கிறது.


தமிழ்வேள்
ஜன 30, 2025 10:04

கிரிப்டோக்களுக்கு திதி கொடுக்கும் வழக்கம் இல்லாததால் சுரணை கெட்ட திருட்டு திராவிட கும்பலோடு இணைந்து ஹிந்து நம்பிக்கைகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்..


Sundar R
ஜன 30, 2025 09:03

பொடி, பீடி, குடி, லேடி, போதைப்பொருட்கள் இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய கெட்ட பழக்கம் ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்கு ஓட்டு போடுவது. அதைவிட பெரிய கெட்ட பழக்கம் திமுகவோடு கூட்டணி வைக்கும் கட்சியினரை நல்லா தேய்ந்து போன ...


VENKATASUBRAMANIAN
ஜன 30, 2025 07:58

கோவில் நடைமுறைகள் தெரியாமல் எப்படி செயல் அலுவலராக உள்ளார். இதுதான் அறநிலையத்துறையின் லட்சணம்.


G Sundaresan
ஜன 30, 2025 07:00

தான்தோன்றி தனமாக நடந்து விட்டு அதற்கு சப்பை கட்டு வேறு. பின்புலம் இருப்பதால் அப்படி நடக்கிறார்கள். கண்டிப்பாக ஒரு நாள் கடவுள் தண்டித்தால் அன்றி இவர்கள் அடங்கமாட்டார்கள்.


No Crypto
ஜன 30, 2025 06:02

அனேகமாக இவர் வெறும் ராமதிலகமாக இருக்க வாய்ப்பில்லை. மதம் மாறிய இரட்டைப் பெயர் க்ரூப்பாக இருப்பார்.


சமீபத்திய செய்தி