உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுச்சேரி அருகே கரையை கடந்தது ‛பெஞ்சல் புயல்

புதுச்சேரி அருகே கரையை கடந்தது ‛பெஞ்சல் புயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு பெஞ்சல் என பெயர் சூட்டப்பட்டது. இது, மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் கணித்து இருந்தது.இது மெதுவாக கரையை நோக்கி நகர்ந்து வந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0xtwk1zu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை 5: 30 கரையை கடக்க துவங்கிய புயல் டிசம்பர் 1 அதிகாலை 1 மணியளவில் முழுமையாக கரை கடந்தது. புயல் கரை கடந்தாலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்ட நிலையில், இரவு 10 மணி வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

கனமழை

புயல் கரையை கடக்க துவங்கிய நேரத்தில் விழுப்புரம், கடலூரில் கனமழை பெய்தது.

மின்சாரம் துண்டிப்பு

புயல் கரையை கடந்த சமயத்தில் மரக்காணம், மாமல்லபுரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சூறைக்காற்று

புயல் கரை கடந்த நேரத்தில் கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. சென்னை மெரினா கடற்கரை, புதுச்சேரியிலும் பலத்த காற்று வீசியது.

வலுவிழக்கும் புயல்

பெஞ்சல் புயல் மேற்கு தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 07:54

போங்க, முடிந்தால் 10 பேக்கட் பால், 10 ரொட்டி வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுங்க. நாங்க 3 பேர் பைக் எடுத்துண்டு இதைத்தான் செய்து கொண்டு, இப்போ டீ குடிச்சுண்டு இதைப் பதிவிடுகிறேன். இன்னும் 5, 6 ஏரியா போய் பால், பிரெட் குடுக்கலாம் என்று இருக்கிறோம்


இறைவி
டிச 01, 2024 05:20

அதிக கன மழையோ ஒரு மணி நேரத்தில் 20 செமீக்கும் அதிகமாகவோ சென்னையில் மழை கொட்டி விடவில்லை. நிதானமாகவே பெய்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான சாலைகள், தரைவழி பாலங்கள் எல்லாம் மழை நேரில் முழுகி உள்ளன. அப்படியானால் 4000 கோடி ரூபாயில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டது எல்லாம் பொய்யா கோபால். இதுதான் யாரும் குறையே சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி. காசுக்கும் குவாட்டருக்கும் வெட்கமில்லாமல் ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரையிலும், ஓட்டு சதவிகிதத்தை அதிகரிக்க ஆமாம் சாமி போடும் கட்சிகளை வளைத்து வைத்து இருக்கும் வரையிலும் தீயமுகதான் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வரும். மக்கள் எப்போதும் போல சகதியில் உழலும் ஜீவன்களாக சந்தோஷத்தை அனுபவிப்போம். இதுவரை கட்சி சார்பாக காசு கொடுத்தது போக இப்போது அரசு செலவிலேயே மகளிர் உரிமைதொகை என்ற பெயரில் மாதாந்திர காசு கொடுக்கிறார்கள். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு வரி, மின்சார உயர்வு மூலம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நம்முடன் பிடுங்குகிறார்கள். நாமும் பல்லிளித்து ஓட்டு போடுவோம்.


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 07:47

ஏழைகளுக்கும், ஏழை மாணவ மாணவியருக்கும் மாதந்திர உதவித் தொகை வழங்குவது உங்களுக்குப் பிடிக்கவில்லையோ? அவர்கள் வாழ்வில் உயரவே கூடாது என்கிற கொடிய எண்ணம் உங்களுக்கு. இந்தியாவிலேயே, தமிழ் நாட்டில் தான் மின் கட்டணம் குறைவு என்ற நிஜம் உங்களுக்குத் தெரியுமா? பிற மாநிலங்களில் புயல் மழை தினங்களில் என்ன மாதிரி இழப்புகள் நேருகின்றன தெரியுமா? சும்மா சும்மா குவாட்டாருக்கு ஓட்டு போடுகிறார்கள் என்று எழுதுவதன் முட்டாள்தனம் தெரியவில்லையா உங்களுக்கு? ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சிகளுக்கு ஆயிரங்களில் நிதி கொடுக்கிறவர்கள் பற்றித் தெரியுமா உங்களுக்கு? பிடித்த கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு பணமும் கொடுத்து, வரிசையில் நின்று ஓட்டும் போடுகிற லட்சோப லட்சம் மக்கள் பற்றியாவது தெரியுமா? யாரு உங்களை "பல்லிளித்து ஓட்டு போடச் சொன்னது? உர்ருன்னு முகத்தை வெச்சிண்டு ஓட்டு போடுங்க. அல்லது நோட்டா வில் போடுங்க. சும்மா காலையிலேயே, எதிர்மறையா, அது சரியில்லை, இது சரியில்லை, ஆரிய மாடல், திராவிட மாடல் னு புலம்ப வேண்டியது.


ராமகிருஷ்ணன்
டிச 01, 2024 02:50

விடியாத விடியலின் செய்தி இப்படி இருக்கும். ஸ்டாலின் அதிரடி, புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்த்து சென்னைக்கு வர இருந்த புயல் பயந்து ஓடி விட்டது. அல்லக்கை ஊடகங்கள் மூலம் செய்திகள் பரப்புவார்கள்.


j
டிச 01, 2024 00:50

Dinamalar admk support enpathai maniku oru murai nirupikireerkal


Ganapathy
நவ 30, 2024 21:59

ஆமா எதுக்கு அறிவாலயத்துல" புயல் கட்டுபாட்டு அறை"? அது என்ன அரசு அலுவலகமா? எதுக்கு தொளபதி கோட்டைல இதை அமைக்கல? பொது வரி பணத்துல அறிவாலய செலவுகணக்கும் சேர்ப்பா? அப்ப அறிவாலயத்தை தமிழக அரசின் பொதுமக்கள் சொத்தாக அறிவிக்கவும்.


ஆரூர் ரங்
நவ 30, 2024 21:58

10 PM.மணிக்கணக்காக மழையைக் காணோம். காற்று இன்னும் நிற்கவில்லை.


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 07:33

அடடா மழையைக் காணோமே, அரசியல் பண்ண முடியலியே என்று வருத்தமோ?


sankar
நவ 30, 2024 20:56

எண்டு கார்டு போட்டாச்சு - அவங்க ,அவங்க வேலையே பாருங்கோ - அல்லது துணைமுதல்வர் சாதனை என்று விளம்பரம் பண்ணுங்கோ


N Srinivasan
நவ 30, 2024 19:34

அப்பாடி! நாளைய முக்கிய சேதி காசிமேட்டில் மீன்வரத்து இல்லாததால் மக்கள் அவதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை