உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்டம் இனிதே ஆரம்பம்; இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் துவக்கம்!

ஆட்டம் இனிதே ஆரம்பம்; இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் துவக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக துவங்கியது. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டு இதுவாகும். மாடு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், விழாக்குழுவினர் உற்சாகம் அடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் புத்தாண்டு, புனித விண்ணேற்பு அன்னை சர்ச் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம். இந்தாண்டு தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று (ஜன.,04) துவங்கி நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் துவக்கி வைத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=na2m3cd6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதனால், மாடு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், விழாக்குழுவினர் உற்சாகம் அடைந்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் செல்லும் இருபுறம் தடுப்புகள், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான மேடையும், ஜல்லிக்கட்டு நடத்தும் விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.தமிழகத்தில், 2025ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது, வழக்கம் போல தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜன 04, 2025 21:50

போட்டிக்கு முன்பு அவற்றுக்கு ஞான ஸ்நானம் செய்து வைப்பார்களா?


Sivagiri
ஜன 04, 2025 12:30

பொங்கல் பண்டிகை , ஹிந்து பண்டிகை அல்ல , என்று நிலை நிறுத்த , படாத பாடு படுகிறது , திராவை மாடல் . . .


ஆரூர் ரங்
ஜன 04, 2025 10:39

காளைகளுக்கு அனுதாபங்கள். எந்தத் துன்பமும் விளைவிக்காத பிராணிகளை ஓட விட்டு பத்து பேர் துரத்தி துன்புறுத்தல் நியாயமல்ல. முடிஞ்சா ஒத்தைக்கு ஓத்தை மோதிப்பாருங்க. அதுதான் வீரம். பெரும்பாலான இடங்களில் சரியான தடுப்புக் கட்டைகள் பாதுகாப்பு இல்லாத ஜல்லிக்கட்டு நடக்கிறது. வாக்கு வங்கிக்காக அரசு மவுனம் காத்து வருகிறது?


கூமூட்டை
ஜன 04, 2025 10:27

இதுவும் திராவிட மாடல்


Ponnusamy
ஜன 04, 2025 10:21

வாழ jallikattu....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை