உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர்கல்வி பயிலாத பெண்களே இல்லை என்பதே இலக்கு; முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பயிலாத பெண்களே இல்லை என்பதே இலக்கு; முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: 'உயர்கல்வி பயிலாத பெண்களை இல்லை என்ற நிலையை உருவாக்காமல் ஓயமாட்டேன்' என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் பயன் பெறும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: புதுமைப் பெண் திட்டம் மூலம் பாரதி கண்ட கனவை நிறைவேற்றி உள்ளோம். உயர் கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் புதுமைப்பெண் திட்டத்தின் நோக்கம் நிறைவேறி உள்ளது. பிள்ளையின் கல்விச் செலவுக்கு தந்தை கணக்கு பார்க்க மாட்டார், அது போல தான் நானும்.உயர்கல்வி பயிலாத பெண்களை இல்லை என்ற நிலையை உருவாக்காமல் ஓயமாட்டேன். அனைத்து துறைகளிலும் தமிழக பெண்கள் 'டாப்' ஆக உள்ளனர். அரசு பள்ளியில், மாணவிகள் சேர்க்கை குறைந்ததாக புள்ளி விவரம் வந்ததால் புதுமைப்பெண் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. திட்டத்தால் செலவு அதிகம் என பார்க்கவில்லை, தந்தைக்குரிய செயலாக பார்க்கிறேன். மாணவர்களின் கல்விக்கு எந்த தடை வந்தாலும் அதை நான் உடைப்பேன்.

படிங்க..படிங்க...

புதுமைப் பெண்களே படிங்க... படிங்க... படிங்க. உங்களுக்கு உறுதுணையாக நானும் அரசும் இருப்போம். பெண்கள் தங்கள் திருமணத்திற்கு பின் வேலைக்கு சென்று பணியாற்ற வேண்டும். ஒரு பட்டத்தோடு நிறுத்தி விடாமல் உயர் கல்வி பயிலுங்கள். பெண்களின் கல்விக்கான அனைத்து திட்டங்களுக்கும் செலவு செய்ய அரசு தயாராக உள்ளது. தற்போது கல்வியை பொறுத்தவரை பெண்களை முன்னிலையில் உள்ளனர். ஒரு ஆண் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தால் அது கல்வி வளர்ச்சி. அதுவே ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூகப் புரட்சி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

krishna
டிச 30, 2024 19:25

ENGE ENGE EERA VENGAAYAM 200 ROOVAA OOPIS CLUB BOYS THALAI VAIKUNDESWARAN. ODI VANDHU DRAVIDA MODEL KUMBALUKKU MUTTU KODU.ILLAI 200 ROOVAA COOLIE CUT.


krishna
டிச 30, 2024 19:24

PAAVAM NAMMA THUNDU SEATTU KAIPULLA ONNUM THERIYAADHA KOMALIYAA ULARIKITTE IRUKKAR.


அப்பாவி
டிச 30, 2024 16:57

திருட்டு பிரியாணி விடியல் ஆட்சியில் பெண்களை கல்லூரி அனுப்பறதுக்கே பயமா இருக்கே கோவாலு.


Kumar Kumzi
டிச 30, 2024 15:38

அதுசரி தமிழில் எழுதி குடுத்த துண்டுசீட்டையே வாசிக்க தெரியாத நீ எதை வைத்து இப்பிடி சொல்லுற ஓஹ் அண்ணாமலை சம்பவத்தை பற்றி சொல்லுறியோ


Madras Madra
டிச 30, 2024 15:07

அடிச்சி வுடு இது வரைக்கும் நீ விட்ட கப்சாவல்லாம் மக்களும் மறந்துட்டாங்க இதையும் மறந்துடுவாங்க


Venkateswaran Rajaram
டிச 30, 2024 14:35

பிள்ளையின் கல்விச் செலவுக்கு தந்தை கணக்கு பார்க்க மாட்டார், அது போல தான்// பெற்ற பிள்ளைக்கு மக்கள் உழைத்து சம்பாதித்து செலவு செய்வார்... இவர் மக்கள் பணத்தில் இருந்து செலவு செய்துவிட்டு தன் பாக்கெட்டில் இருந்து கொடுப்பது போல முதல்வர் பேசுகிறார்.. மக்கள் பணத்தை தனது பணம் போல பேசும் முதல்வர் பதவி விலக வேண்டும். மக்கள் பணத்தை மக்களுக்கு செலவு செய்ய தான் அரசு.. இதில் முதல்வர் உரிமை கொண்டாட உரிமை இல்லை.. முதல்வர் பேச்சுக்கு கண்டனம் தர தமிழகமே திரண்டு வா... பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தர முடியாத திமுக மண்ணோடு அழியவேண்டும். கூண்டோடு ஒழிய வேண்டும். வேரோடு களைந்து ஒழிக்க வேண்டும். திமுக இல்லாத தமிழகம் படைப்போம் இது தமிழக மக்கள் செய்து காட்டுவார்கள்


N.Purushothaman
டிச 30, 2024 14:33

போட்டோவுல இருக்குறது மெழுகுவர்த்தி கனிமொழியா அது ? அண்ணா பல்கலை மாணவி விவகாரத்துல வாயில பூட்டு போட்டு இருக்குற பெண்மணியா அது ? திராவிட மாடல்லன்னா இப்படித்தான் போல ...


Haja Kuthubdeen
டிச 30, 2024 16:12

தமிழ்நாட்டில் நடந்தால் மட்டும் அம்மணி தூங்குவாங்க...


sundar
டிச 30, 2024 14:30

ஆமாண்ணே எல்லாரையும் படிக்க வைங்க. இல்லாட்டி...


ஆரூர் ரங்
டிச 30, 2024 13:57

57 ஆண்டுகளாக முதல்வர் பதவிக்கு ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க முடியாத கட்சி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு துணை முதல்வர் பதவி கூட கொடுக்கமுடியாத கட்சி சமத்துவம், பெண்ணுரிமை, உயர்கல்வி, பகுத்தறிவு பேசுகிறது. பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்குக் கூட பாதுகாப்பில்லை. (அதெப்படி பல்கலைக் கழகத்துக்கு பொருத்தமாக அண்ணா பெயரை வைத்தீர்கள்?)


V RAMASWAMY
டிச 30, 2024 13:55

எதனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த உலகத்திலே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை