உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்று, நான்கு சீட்டுகள் வேண்டாம்: தமிழகத்தை ஆள்வதே இலக்கு: சீமான்

மூன்று, நான்கு சீட்டுகள் வேண்டாம்: தமிழகத்தை ஆள்வதே இலக்கு: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அம்பத்துாரில், நா.த.க., சார்பில், 'தமிழ்நாடு நாள்' பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், நா.த.க., தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் பேசியதாவது: மற்ற மாநிலங்கள் அரசு விழாவாக, அம்மாநிலங்கள் பிறந்த நாளை, பிரிந்த நாளை கொண்டாடுகின்றன. ஆனால், இங்கு கொண்டாடப்படுவதில்லை. திராவிடர்கள் வரலாற்றை திரிப்பர் அல்லது மறைப்பர் என்பதற்கு இது சான்று. பிறந்த நாளை கொண்டாடாதவர்கள், பெயர் வைத்த நாளை கொண்டாடுவது பைத்தியக்காரத்தனம். திராவிடம் என்பது பிரிவு மற்றும் ஏமாற்று என்பதற்கு எடுத்துக்காட்டு. இந்த ஆட்சி, அதிகாரம் யாருக்கானது என, எண்ணி தெளிய வேண்டும். தமிழகத்தில் எந்த வரலாற்று சுவடும் இருக்கக்கூடாது என, திராவிடரும், இந்தியர்களும் ஒழித்தனர். விரைவிலேயே அரசு விழாவாக, நவ., 1ம் தேதி, தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும். அதை சாதித்து காட்டுவோம். கூட்டணி வைத்தால், மூன்று, நான்கு சீட் கிடைக்கும். எங்களுக்கு வேண்டியது சீட் அல்ல. தமிழகத்தை கைப்பற்றுவோம். அதற்கு பொறுமை வேண்டும். கூட்டணிக்காக காலில் விழுந்து கிடக்க முடியாது. நாம் பதறாமல், தடுமாறாமல் இலக்கை நோக்கி பயணித்து கொண்டே இருப்போம். இங்கு நான் என்ன பேசுகிறேன்; அதை உள்வாங்கி தான் கைத்தட்டுவர். ஆனால், அங்கே ஆரம்பத்தில் இருந்தே கத்துவர்; அவனும் கத்துவான்; ஒன்றும் புரியாது. இந்நாட்டில் ஈ.வெ.ரா.,வும் கருணாநிதியும் தான். மற்ற தலைவர்கள் பெயர்கள் இருந்தால் மாற்றி விடுவர். தமிழர்கள் நாய். ஏன் நாய் என்றால், தெலுங்கன், கன்னடன் யார் வந்தாலும் அரிசி கொடுத்து விடுவர். ஆனால், தமிழன் வந்தால், குறுக்கே படுத்து விடுவர். இதனால் தான் தமிழனை நாய் என்கிறோம். திரை கலைஞர்களை பாராட்டுவோம். ஆனால், நாட்டை ஆள தகுதியும் அறிவும் வேண்டும். நான் சிறையில் இருந்து கட்சி ஆரம்பித்தேன். வந்ததும் முதல்வர் என கூறவில்லை. நான்கு முறை தோற்றாலும், ஐந்தாவது முறை தனித்து போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

vbs manian
நவ 03, 2025 11:45

ஆள இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்.


vbs manian
நவ 03, 2025 11:44

ஆள இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்.


sundarsvpr
நவ 03, 2025 08:52

தி மு க வில் தொண்டர்கள் ஏராளம். தொண்டர்களை கட்சி கவனத்தில் வைத்துள்ளது. தொண்டர்கள் மக்களை சந்திக்கின்றனர். இதுவே தி மு க வின் பலம். தெற்கில் பி ஜெ பி இப்படி இல்லை. மற்ற திக்குகளில் பி ஜெ பி மக்களை சந்திக்கின்றனர். சீமான் இதனை சிந்திக்கவேண்டும்.


Sun
நவ 02, 2025 21:15

ஒரு இந்திய மனிதனின் சராசரி ஆயுள் காலம் ஐநூறு எனும் காலம் வரும் போது ஒரு வேளை அப்பவும் ஒரு வேளைதான் சீமானின் ஐநூறு ஆண்டு கால கனவு பலிக்கலாம்.


என்றும் இந்தியன்
நவ 02, 2025 20:18

ஓங்கோல் தெலுங்கன் ஸ்ரீலங்கன் கன்னடம் இதுவரை டாஸ்மாக்கினாடு முதல்வராக இருக்கும் போது ஸ்ரீலங்கன் சீமானுக்கு ஆசை இருக்குமல்லவா


Palanisamy T
நவ 02, 2025 11:17

திராவிடம் என்பது பிரிவு மற்றும் ஏமாற்று வேலை என்று எந்த வரலாறு உங்களுக்கு போதனை செய்தது. கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.


ngopalsami
நவ 02, 2025 11:08

அண்ணே , இலக்கை நோக்கி நாம் பயணித்துக்கொண்டே இருப்போம். அப்போதுதான் நமக்கு செலவுக்கு நிதி கிடைக்கும். இந்த முறை ஒரு பத்து சட்டமன்ற உறுப்பினர்களை அடைய முயற்சி செய்யவும்.


G Mahalingam
நவ 02, 2025 11:02

கஜினி முகமது 13 தடவை படையெடுத்தது 5 ஆண்டுகளுக்குள். ஆனால் தேர்தல் வருவது சட்டசபைக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை. 2026 2031 2036. இப்போது சீமானுக்கு 55 வயது என்று வைத்து கொண்டாலும் அடுத்த மூன்று தேர்தலுக்கு மட்டுமே சீமான் பம்பரமாக சுழல‌ முடியும். 70 வயது ஆகி விடும். சீமானுக்கு அடுத்து மனதில் பதிய கூடிய ஆட்கள் ஒருவரும் இல்லை


Shekar
நவ 02, 2025 10:02

யாராவது ரிஷி மக்களை சபிக்க வேண்டி இவருக்கு ஆயிரம் ஆண்டுகள் வாழும் வரம் கொடுத்துவிட்டனரா?ஆனாலும், ஆயிரம் ஆண்டுகள் பத்தாது இவர் ஆட்சியை பிடிக்க. பாவம் அந்த நாம் தமிழர் வேட்பாளர்கள். மத்த கட்சியில் ஒருக்க நின்னவர் திரும்ப திரும்ப சீட் கேட்பார். நம்ம சைமன் கட்சியில் ஒருமுறை போட்டியிட்டவர் திரும்ப சீட் கேட்பதில்லை, எதனை தடவைதான் மனுஷன் சொத்துக்களை காவு கொடுக்கமுடியும்.


shiva Kumar
நவ 02, 2025 09:44

வாய்ப்பு இல்ல ராஜா


சமீபத்திய செய்தி