உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பதே குறிக்கோள்; த.வெ.க.,

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பதே குறிக்கோள்; த.வெ.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் 2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து தமிழக வெற்றிக் கழகம் எனும் தனது கட்சியை நடிகர் விஜய் முன்னெடுத்துச் செல்கிறார். இதற்காக, கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை, மிகவும் பிரமாண்டமாக நடத்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ijl84enp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தக் கூட்டத்தில் தங்களின் கொள்கை, கோட்பாடுகளை வெளியிட்ட த.வெ.க., தலைவர் விஜய், தங்களின் அரசியல் எதிரி யார் என்பதையும் அறிவித்தார். அதாவது, தி.மு.க.,வையே முழுக்க முழுக்க அவர் எதிர்த்து பேசினார். ஆனால், அ.தி.மு.க., பற்றி விஜய் எந்த விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை. மேலும், 2026ல் கூட்டணி போட்டு தேர்தலை சந்திக்க தயார் என்றும், ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். இதன் மூலம், தி.மு.க.,வுக்கு எதிராக ஓர் அணியை திரட்ட விஜய் முடிவு செய்திருப்பது உறுதியானது. அ.தி.மு.க., பற்றி மாநாட்டில் விஜய் ஏதும் பேசாததால், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. அதேபோல, த.வெ.க.,வை விமர்சிக்கக் கூடாது என்று இ.பி.எஸ்., வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வந்தன. இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்து தமது உரையில் கட்சியின் தலைவர் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். அவரது வழிகாட்டுதலின்படி, தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. அ.தி.மு.க.,வுடன் த.வெ.க., கூட்டணி என்று வெளியாகி வரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது. த.வெ.க.,வின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. மக்களின் பேராதரவோடு பெரும்பான்மையுடன் வென்று தமிழக மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Thamilarasu K
நவ 20, 2024 16:55

நம்மை நம்பி எத்தனை ஜீவன்கள் உள்ளன பார் தமிழா? உன்னுடைய பிரியாணி ஆசையையும், மதுபான ஆசையையும் மூலதனமாக வைத்து யார் வேண்டுமானாலும், என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம்


Uuu
நவ 19, 2024 11:27

எனக்கு சிரிப்பு வருகிறது


பேசும் தமிழன்
நவ 19, 2024 09:02

தேர்தலில் உண்மை தெரிந்து விடும்... எத்தனை தொகுதியில் நோட்டாவுடன் போட்டி போடுகிறார்கள் என்று......ரஜினி அவர்களுக்கு இல்லாத ரசிகர்களா யாருக்கும் இருந்து விட போகிறார்கள் ?


AMLA ASOKAN
நவ 18, 2024 22:47

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பதே குறிக்கோள் என்று சொல்வதுடன் நான் முதல் அமைச்சர், நல்லாட்சி வழங்குவேன் என்றும் சொல்லியிருக்க வேண்டும். அ.தி.மு.க.,வுடன் த.வெ.க., கூட்டணி என கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்று கூறுவதை காட்டிலும், ஊழல் அ.தி.மு.க.,வுடன் என்றும் உறவு இல்லை என அடித்து கூறியிருக்கவேண்டும். உறுதியான முடிவு எடுக்க திணறும் நடிகர் கட்சி, ரசிகர்கள் மாநாடு நடத்த தான் லாயக்கு . கருப்புப்பண முதலை , ஊழல் பற்றி கண்ணீர் விடுகிறது . முன்னணி நடிகர் காமெடி நடிகர் ஆகிவிட்டார். கட்டுக்கோப்பில்லாத இந்த கட்சியில் 2 கோடி ரசிகனும் 234 MLA சீட் கேட்பான் , பிறகு அமைச்சர் பதவி கேட்பான் . இது ஒரு அரசியல் தமாஷ் .


பாலா
நவ 18, 2024 21:17

நட்சா ஹிரோ தான் இந்த மாப்ள ப்ரண்டடு அல்லாம் பளய ஸ்டைலு ஆங்ங்ங


M Ramachandran
நவ 18, 2024 20:37

தீ கா வுடன் எழுத படாத அறிக்கையா? ஜோசப் சார் நாமெல்லாம் என்றைக்கிருந்தாலும் தீ மு கா குடும்பம்


B.B.Muthukumaar
நவ 18, 2024 18:45

முதல்வர் கனவில் இவரும்


R.MURALIKRISHNAN
நவ 18, 2024 18:09

நடிகனை நம்பினால் நட்டாற்றில் விடுவான்


Just imagine
நவ 18, 2024 17:44

காரைக்குடி பக்கத்தில் உள்ள ஆச்சிகள் எல்லாம் உஷாராக இருங்கள் ...


Srinivasan Narasimhan
நவ 18, 2024 17:41

ப்ரோ கமல் இதுக்கு மேலே கதை விட்டார் இப்போ வெக்கம் மானம் சுய மரியாதை எல்லாத்தயும் திமுக விடம் அடமானம். விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சப்ப தனியாகவே இருப்பதினால் அப்பரம் அதிமுக உடன் கூட்டனி அடுத்து நீங்க இருக்கவே இருக்கு தமிழ் மதவாதம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை