உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர் சேர்க்கை கட்டணம்: ரூ.383 கோடி தந்தது அரசு

மாணவர் சேர்க்கை கட்டணம்: ரூ.383 கோடி தந்தது அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : நம் நாளிதழின் செய்தியை தொடர்ந்து, கட்டாய கல்வி சட்ட மாணவர் சேர்க்கையில், தனியார் பள்ளிகளுக்கான கட்டணமாக 383 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.மத்திய -- மாநில அரசுகளின் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடங்கள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், கல்வி கட்டணமின்றி மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான கட்டணத்தை பள்ளி களுக்கு, தமிழக அரசே நேரடியாக வழங்கும். இதன்படி, கடந்த கல்வி ஆண்டு மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு, அரசின் சார்பில் நிதி வழங்கப்படவில்லை என்று தனியார் பள்ளிகள் குற்றஞ்சாட்டின.இது குறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது. இதை யடுத்து, பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கி, தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழக தனியார் பள்ளிகள் பிரிவு இயக்குனர் நாகராஜமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2022 - 23ம் கல்வியாண்டில், 65,946 பேர் சேர்க்கப்பட்டனர். முந்தைய ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களையும் சேர்த்து, 4 லட்சத்து, 17,068 பேர் படித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்வி கட்டணமாக பள்ளிகளுக்கு ஈடு செய்யும் தொகை, கடந்த கல்வி ஆண்டுக்கு 383.59 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொகை பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.நடப்பு 2023 - 24ம் கல்வி ஆண்டில், 70,553 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடப்பு கல்வி ஆண்டுக்கான தொகை, அடுத்த நிதி ஆண்டில், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் தனியார் பள்ளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ