உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்

யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''3வது முறை என்னை கைது செய்து இருக்கின்றனர். அரசு ஒரு யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது என்பதை தவிர, இதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்'' என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.புழல் சிறையில் இருந்து யுடியூபர் சவுக்கு சங்கர் நேற்று விடுவிக்கப் பட்டார். அவர் சிறையில் நடந்தது குறித்து அளித்த பேட்டி: புழல் சிறையில் 300,400 கைதிகளுடன் வைத்தார்கள். முதல்நாள் கஸ்டடிக்கு போய்விட்டு வந்த உடன் பார்த்தால், மரத்தில் போய் சிசிடிவி கேமரா மாட்டினார்கள். சிறையில் ஒருவர் வாழைப்பழம் கொடுத்தார். அவரை வேறு பிளாக்கிற்கு மாற்றிவிட்டார்கள். மற்றொருவர் மிக்சர் கொடுத்தார். இவரை 2வது பிளாக்கிற்கு மாற்றிவிட்டார்கள். என்னை 24 மணி நேரமும் கண்காணித்த காவலர்கள் யாராவது என்னுடன் பேசினால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

தனிமை சிறை

யாருமே பேசக் கூடாது என்றால் அது தனிமை சிறை தானே? சிறையில் டைம்ஸ் ஆப் இண்டியா பேப்பர் ஒருவர் தினமும் வாங்கி கொண்டு இருக்கிறார். அவரிடம் பேப்பர் வாங்கி படித்தேன். அந்த நபருக்கு பேப்பர் கொடுத்தால் ஜெயில் மாற்றம் செய்வதாக மிரட்டிவிட்டனர். என் மீது 48 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். 48 வழக்குகளுக்கும் நான் பெயில் போட்டுவிட்டு, 4 வருடம் கழித்து தான் நான் வெளியே வர முடியும். அதுவரைக்கும் உடல்நிலை என்னவாகும்.உடல்நிலை மோசம் ஆக வேண்டும் என்பதற்காக தான், சிறைக்கு உள்ளேயும் அழுத்தம் தரப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தீங்க என்றால், பிரசர் கொடுப்பதற்கு தான். பிபி அதிகமாகுகிறது. இது மாதிரி அதிகமாகி செத்துவிட்டால் நிம்மதி எல்லாருக்கும். 2 நாட்கள் அஞ்சலி போஸ்டர் ஒட்டிவிட்டு, இரங்கல் கூட்டம் நடத்திவிட்டு போய்விட்டு இருக்கலாம். சந்தோஷமாக இருப்பார்கள். இவன் தொல்லை ஒழிந்தது என்று நினைப்பார்கள்.

சவுக்கு மீடியா

அந்த ஐடியாவில் இவர்கள் செய்கிறார்கள் என்பதை எனது வழக்கறிஞர்கள் புரிந்து கொண்டு தான், உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் கேட்டனர். ரெகுலர் ஜாமின் வழங்க 4 வருடம் ஆகும். அதன் வரை உடம்பு தாங்க வேண்டும். உயர்நீதிமன்றம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, மிக நீண்ட அப்ஷர்வேஷன் எல்லாம் கொடுத்து, மொத்தம் எத்தனை எப்ஐஆர் நிலுவையில் இருக்கிறது என நீதிபதிகள் கேட்டனர். பின்னர் ஜாமின் கொடுத்தனர். அவர்களின் நோக்கம் என்பது நான் சவுக்கு மீடியாவை நடத்த கூடாது என்பது தான்.

அஞ்சுகிறது

ஒரு யுடியூப் சேனலை பார்த்து அரசு பயப்படும் நிலைமையில் தான் இந்த மாநிலம் உள்ளது. நான் இதுவரை 2 வருடமாக எத்தனை வழக்குகளை சந்தித்து இருக்கிறேன். 3வது முறை என்னை கைது செய்து இருக்கின்றனர். அரசு ஒரு யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது என்பதை தவிர, இதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும். இந்த அரசில் நடக்கும் தவறுகளை என்னை தவிர யார் பேசுகிறார். கொடுக்கும் காசை வாங்கி கொண்டு அமைதியாக இருந்தால் வாழலாம். இல்லையென்றால் வாழ விட மாட்டார்கள். இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ராஜா
டிச 28, 2025 12:41

அந்த பள்ளியில் படித்த மாணவி மரணத்தில் சவுக்கு போல வளைந்து வளைந்து கருத்து தெரிவித்தது மனசாட்சி இல்லாமல் தான் நடந்தது போல தெரிகிறது.


Dv Nanru
டிச 28, 2025 12:24

சவுக்கு உண்மையிலேயே நீ ரொம்ப பெரிய ஆள் ஒன்னும் கவலை படவேண்டாம்


G Mahalingam
டிச 28, 2025 11:52

அடுத்த ஆட்சியில் சுமார் 5 காவல் துறை அதிகாரிகள் மற்றும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்ய படுவார்கள். அடுத்த அதிமுக ஆட்சி வந்துதுமே சிலர் ராஜினாமா செய்து விட்டு போய் விடுவார்கள். அவ்வளவு ஊழல் செய்து உள்ளனர்


Dv Nanru
டிச 28, 2025 11:49

எப்பா சவுக்கு கொஞ்சம் வாய வச்சுகிக்கிட்டு சும்மா இரு நீங்க பாட்டுக்கும் எதாவது பேசி திரும்ப உள்ளே புடிச்சப்போட்டு ..கம்முன்னு இரு ...


M S RAGHUNATHAN
டிச 28, 2025 11:39

யார் யாருக்கோ அஞ்சா நெஞ்சன் என்று பெயர் வைத்தார்கள். உண்மையில் அஞ்சா நெஞ்சன் சங்கர் தான்.


Perumal Pillai
டிச 28, 2025 11:35

வீடுகளில் ஆர்டெர்லி என்னும் மோசடி பெயரில் கடைநிலை ஊழியர்கள் மேல் திணிக்கப்படும் அடிமைத்தனம் அவலதனம் கொத்தடிமைத்தனம் ஆகியவத்தை உலகிற்கு தெரியப்படுத்திய, அம்பலப்படுத்திய ஒரு உண்மையான ஜர்னலிஸ்ட் . இவரைக்கண்டு பயப்படுகிறார்கள் என்றால் இவர் சொல்லுவது அனைத்தும் உண்மை என்று தான் பொருள் .


N Annamalai
டிச 28, 2025 10:50

உங்களுடன் மக்கள் உள்ளார்கள் .


அரவழகன்
டிச 28, 2025 10:40

பருந்து சுற்றுது கவனம்


கோடிஸ்வரன்
டிச 28, 2025 10:22

ஓட்டு மொத்த அரசாங்க நிர்வாகமே ஊழல் என்ற புற்று அரித்து விட்டது . புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய தருணம்.


Chandru
டிச 28, 2025 09:55

எல்லாம் சிலகாலம்.. ஒவ்வொரு செயலுக்கும் ஒருவர் அதற்கேற்ற பலனை அனுபவித்தே ஆக வேண்டும். இது தர்மம் வகுத்த நியதி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை