உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் திறந்த அரசு பள்ளி ஓராண்டில் இடிந்ததேன்: வாசன்

முதல்வர் திறந்த அரசு பள்ளி ஓராண்டில் இடிந்ததேன்: வாசன்

சென்னை: த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: ஈரோடு மாவட்டம், கூகலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த பள்ளிக் கட்டடம், 2024 ஜூலையில், முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. ஓராண்டில் பள்ளி கட்டடம் இடிந்தது, அரசின் செயலற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது. பள்ளிக் கட்டடங்களை யார் கட்டினாலும் சரி; முதல்வர் மட்டுமல்ல, யார் திறந்தாலும்; அவற்றின் தரமானது, ஒதுக்கிய நிதி மதிப்பீட்டிற்கு சற்றும் குறையாமல் இருக்க வேண்டும். அதைவிடுத்து ஒதுக்கிய நிதியில், லஞ்சம், ஊழல் என கணக்கிட்டு, வேலை பார்த்தால், தரம் இருக்காது. கடந்த நான்கு ஆண்டுகளில், அரசு பள்ளி கட்டடங்களின் தரத்தை மேம்படுத்த அல்லது புதிய கட்டடங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி, முறையாக செலவிடப்பட்டதா என ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 24, 2025 07:04

முதல்வர் திறந்த அரசு பள்ளி ஓராண்டில் இடிந்ததேன். இதென்னங்க கேள்வி ..ஓராண்டு தாக்கு பிடித்ததே என்று சந்தோச படுங்கள் ...நாங்கள் என்ன காமராஜரா ...பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ...அதை விடுங்கள் ..டாஸ்மாக் கட்டிடத்தை மிக உறுதியாக கட்டியிருக்கிறோம் இன்னும் ஐம்பது ஆண்டு தங்குமுல்ல ... வருமானம் வரணுமுல்ல ...


சமீபத்திய செய்தி