வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எது பொதுவெளி...? இது மக்கள் மன்றம். கவர்னர் மக்கள் மன்றத்தில் தனது கருத்தை தெரிவிப்பது எப்படி அநாகரிகமாகும்..??
சென்னை:''தமிழக கவர்னர் தன் கருத்தை, குறிப்பின் வாயிலாக அல்லது அதிகாரிகள் வாயிலாக கூறினால் நலமாக இருக்கும்,'' என, தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.உ.வே.சாமிநாத ஐயர் 171வது பிறந்த நாள், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்' விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விாழ சென்னை மாநிலக் கல்லுாரியில் நடந்தது. நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:உ.வே.சாமிநாத ஐயர் தமிழுக்கு ஆற்றிய பணிக்காக, இந்த விழாவை கொண்டாடுகிறோம். அவரையும், தமிழையும் பிரித்து பார்க்க இயலாது. தமிழனின் தொன்மைக்கு சான்றாக, தங்கப் பட்டயமாக, சங்க இலக்கியம் தந்தவர்.ஹிந்தி திணிப்பு செய்த சமயத்தில், அந்த சட்ட நகலை எரித்ததில், நானும் ஒருவன். இன்று தமிழை யாராலும் தொட்டு பார்க்க முடியாத அளவிற்கு, பல்வேறு கட்சியினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மும்மொழி திணிப்பு வாயிலாக, தமிழின் மகத்துவத்தை சிதைக்க பார்க்கின்றனர். எந்த பாதிப்பு வந்தாலும், அதையெல்லாம் தகர்த்தெறியும் பட்டாளம் தமிழகத்தில் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.அதன் பின், சாமிநாதன் அளித்த பேட்டி:ஓலைச் சுவடிகளை கண்டறிந்து, அவற்றை அச்சு ஏற்றம் செய்து, உலகிற்கு தமிழ் மற்றும் தமிழ் இலக்கியங்கள் குறித்த உணர்வுகளை ஏற்படுத்தி, முத்திரை பதித்தவர் உ.வே.சாமிநாத ஐயர். இனி ஆண்டுதோறும் அவருக்கு விழா கொண்டாடப்படும். தமிழக கவர்னர், அரசுக்கு ஆலோசனை கூறுவதென்றாலும், சுட்டிக்காட்டுவது என்றாலும், தன் கருத்தை, குறிப்பின் வாயிலாக அல்லது அதிகாரிகள் வாயிலாக கூறினால், நலமாக இருக்கும். தமிழக பல்கலைகளில், பாரதியாருக்கு இருக்கை இல்லை எனக் கூறியிருப்பது, வேண்டுமென்றே குற்றச்சாட்டு கூறுவது போல் உள்ளது. இது கவர்னரின் பொறுப்புக்கு அழகு அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
எது பொதுவெளி...? இது மக்கள் மன்றம். கவர்னர் மக்கள் மன்றத்தில் தனது கருத்தை தெரிவிப்பது எப்படி அநாகரிகமாகும்..??