உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்ச்சையில் கவர்னருக்கு தொடர்பில்லை; மன்னிப்பு கோரியது பிரசார் பாரதி!

சர்ச்சையில் கவர்னருக்கு தொடர்பில்லை; மன்னிப்பு கோரியது பிரசார் பாரதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டதில், கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை,'' என கவர்னர் மாளிகை கூறியுள்ளது. 'இது கவனக்குறைவால் நேரிட்ட தவறு' என்று கூறியுள்ள பிரசார் பாரதி, அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.தமிழக கவர்னரின் மீடியோ ஆலோசகர் திருஞான சம்பந்தம் 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: சென்னை சேப்பாக்கத்தில் டிடி தமிழ் தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய குழுவினர் கவனக்குறைவாக ' திராவிடம்' என்ற வார்த்தையைக் கொண்ட வரியை தவற விட்டு விட்டனர். இவ்விவகாரம் உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவிர கவர்னருக்கோ அல்லது கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை. தமிழ் மொழி மற்றும் மக்களின் உணர்வுகள் மீது கவர்னர் உயர்ந்த எண்ணத்தை கொண்டுள்ளார். அது எப்போதும் தொடரும். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

மன்னிப்பு கோரியது டிடி தமிழ்

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பிரசார் பாரதி துார்தர்ஷன் சென்னை கேந்திரா டிடி தமிழ் வெளியிட்ட அறிக்கை:டி.டி., சென்னை சார்பில் நடந்த ஹிந்தி மாத நிறைவு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு வரி கவனக்குறைவால் விடுபட்டு விட்டது. அந்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம். தமிழையோ, தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் நோக்கம் இல்லை. இந்த விஷயத்தில் தமிழக கவர்னருக்கு ஏற்பட்ட சங்கடத்துக்கு மன்னிப்பு கோருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Kannan
அக் 19, 2024 09:18

சவால்..... திரு உதயநிதி மற்றும் திரு ஸ்டாலின் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை எந்த பேப்பரை பார்க்காமல் யாருடைய உதவியும் இல்லாமல் வார்த்தை தடுமாற்றம் இன்றி ஒரே மூச்சில் பாடிவிட்டால் அவர்களுக்கு வாழ்நாள் அடிமை என்று நான் எழுதி தருகிறேன்..... ரெடியா.....


krishnamurthy
அக் 19, 2024 08:16

அப்படியானால் பாடல் வரிகளையே மாற்றி வைத்தது சரியா


Saravanaperumal Thiruvadi
அக் 19, 2024 00:13

திட்டமிட்டு இவ்வாறு செய்து விட்டு நடிப்பது என்பது தவறான போக்கு இதே போல் பதிலுக்கு பதில் என்று பிரச்சினை உருவானால் அப்பொழுது ஏற்படும் பாதிப்புகள் நேற்று செய்த தவறை நினைக்க வைக்கும் இந்த போக்கு இந்தியா க்கு நல்லதா ?


Indian
அக் 18, 2024 22:56

அதெப்படி திராவிடம் என்ற வார்த்தை விடுபடும் ....?? வேணும் என்று செய்தது போல் உள்ளது .


theruvasagan
அக் 18, 2024 21:50

தமிழை காட்டுமிராண்டி பாஷை என்றும் தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று சொன்னவரை தங்கள் வழிகாட்டி என்று கொண்டாடுபவர்கள் தமிழை போற்றுபவர்களா.


vbs manian
அக் 18, 2024 21:37

இந்த கட்சி இன்னும் முதிர்ச்சியை அடையவில்லை. உலக நாடுகளை பார்த்து கொஞ்சம் கற்று கொள்ளலாம்.


அப்பாவி
அக் 18, 2024 21:14

ஒண்ணு பிரசார் பாரதி தத்திகளை தூக்கியடியுங்க. இல்லே கெவுனரை போகச் சொல்லுங்க. அப்போது தான் அடுத்ததா வர்றவங்களுக்கு தமிழ் பத்தின மரியாதை இருக்கும்.


ஆரூர் ரங்
அக் 18, 2024 21:01

தமிழ்த்தாய் பற்றி ஈவேரா தெரிவித்த கருத்தை இங்கு எழுத முடியாது. ஆனால் செந்தமிழ் நாடெனும் போதினிலே வெங்காயம் வந்தது காதுக்குள்ளே என்று கிண்டலடித்தது ?. மொழியை வைத்து அரசியலில் காசு பார்க்கிறது கட்டுமரம் குடும்பம்.


Palanisamy Sekar
அக் 18, 2024 20:33

இது ஒன்னும் தலைபோகிற விஷயமே கிடையாது. பல சந்தர்ப்பங்களில் இதே திமுக கவுன்சிலர்கள் மாவட்ட நிர்வாகிகள் தமிழ் தாய் வாழ்த்தினை பாடுகின்ற கொடுமையை என்னென்பது. இப்போது இதே திராவிடர்கள் குறிப்பாக மேயர் பிரியா அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தினை பாடிகாட்டட்டும் ஒழுங்காக பிழையே இல்லாமல். அதன் பிறகு நீங்கள் மன்னிப்பு கோருவது நியாயமே. இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்பது சரியல்ல.


Nagarajan S
அக் 18, 2024 20:32

நீராரும் கடலுடுத்த பாடலில் வரும் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் வரிகளில் வரும் திராவிட என்ற சொல் அண்ணாதுரையை ஈர்த்தது. எனவே அப்பாடலையே அரசுபூர்வமாகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவிருந்த நிலையில் 1969-இல் அண்ணா இறந்தார்.இதன்பிறகு மு. கருணாநிதி முதலமைச்சராகத் பொறுப்பேற்றதையடுத்து, சில வரிகளை நீக்கிவிட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்று இப்பாடலை 1970 மார்ச்சு 11 அன்று தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. 2021-ஆம் ஆண்டு திசம்பர் 17-தேதி அன்று மு. க. ஸ்டாலின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்தது. ஒரிஜினல் தமிழ் தாய் வாழ்த்து: நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே ========================== முழுப்பாடலை சிதைத்து தமிழக அரசு வெளியிட்ட தமிழ் தாய் வாழ்த்து: நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே தமிழணங்கே உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே


Govindaraju
அக் 19, 2024 05:36

ஆரியப் போல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை