உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றும், நாளையும் வெயில் உச்சம் தொடும்; உச்சந்தலை கொதிக்கும்

இன்றும், நாளையும் வெயில் உச்சம் தொடும்; உச்சந்தலை கொதிக்கும்

சென்னை: 'தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.வரும் 15 முதல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.https://x.com/dinamalarweb/status/1943838774024450411தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகலாம்.அதற்கு ஏற்ப குறைந்தபட்ச வெப்பநிலையும் உயரும் என்பதால், பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை